Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 3

 

الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَـٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ﴿٣﴾
(அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?).அல்முல்க் 67 : 3  

 

(அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான்.)
 

அல்லாஹ் வானங்களை ஒன்றன் பின் ஒன்றாக தட்டுத்தட்டாகப் படைத்துள்ளான். அவன் வானங்கள் மற்றும் பூமிகளை பல நோக்கங் களுக்காகப் படைத்துள்ளான். அதிலொன்று தான் எங்களில் யார் சிறந்த அமல் செய்கிறார் என்பதைச் சோதிப்பதற்காக.

 
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.) அல் கஹ்ஃப் – 7.
 

(உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்? என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும்,  பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.) அல் ஹூ -7

 

(அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர்)

 

அவைகளில் ஏற்றத் தாழ்வு எதுவும் கிடையாது. மாறாக, சமமாக இருக்கிறது. அதில் எவ்விதக் குறைகளும் கிடையாது.

 

(மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?)

 

ஆதமுடைய மகனே! வானத்தைப் பார்த்து சிந்தித்துப்பார். அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான் என்ற அவனது வல்லமை உனக்குத் தெளிவாகும். அதில் ஏதாவது குறைகள் இருக்கின்றனவா? அல்லது ஏதாவது பிளவுகள் இருக்கின்றனவா?

 

இப்னுஅப்பாஸ் (ரழி), முஜாஹித் (ரழி), லஹ்ஹாக் (ரழி), தவ்ரி (ரஹ்) ஆகியோரும் இன்னும் பலரும் இவ்வசனத்தில் வரும் தஃபாவுத்” எனும் வார்த்தைக்கு விளக்கம் கூறுகின்றபோது, பிளவுகள் (வெடிப்புகள்) என கூறியிருக்கிறார்கள்.

தொடரும்……

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply