Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை
மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல்.
அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ
அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது.
எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு முயற்சிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
இதில் சுலைமான் (அலை) அவர்கள் அவரது பட்டாளங்களது சிறப்பு விளங்குகிறது. அதாவது அவர்கள் எறும்பையும் அதற்கு மேலுள்ளவற்றையும் தெரிந்துகொண்டே அழிக்கமாட்டார்கள். இறைபக்திநீதி,நியாயம்இரக்கம் போன்றவற்றை எடுத்துக் காட்டுவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது.
ஹூதைபிய்யா உடன்படிக்கையின் பின் நபியவர்களது படையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
அவர்கள் மூலம் தெரியாமல் உங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். (அல்பத்ஹ்:25)
அதாவது அவர்கள் முஃமின்களுக்குத் (தெரிந்துகொண்டே) நோவினை கொடுக்கமாட்டார்கள். ஆனால் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்தது எறும்பாகும். நபியவர்களின் படையை அல்லாஹ்வே புகழ்ந்துள்ளான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அனைத்து நபிமார்களை                    விடவும் சிறந்தவர்களாவார்கள். அவர்களது படையும் அனைத்துப் படைகளை விடவும் சிறந்ததாகும்.
இம்ரான் இப்னு ஹூஸைன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உங்களில் சிறந்தோர் எனது நூற்றாண்டில் வாழ்வோராவர். பின்பு அவர்களையடுத்து வருவோர். பின்பு அவர்களை அடுத்து வருவோர். இம்ரான் இப்னு ஹூஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் இரண்டு நூற்றாண்டைக் குறிப்பிட்டார்களாஅல்லது மூன்றைக் குறிப்பிட்டார்களாஎன்பது தெரியாது. (புஹாரி:2457)
முஸ்லிமுடைய பேச்சுக்கள் மற்றும் செயல்களைப் பற்றிய நல்லெண்ணம் கொள்ள வைக்கும் ஒரு அடிப்படையை அமைக்குமுகமாக உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ((நலவிற்கு ஒரு வாய்ப்பாவது இருக்கும் போது ஒரு முஸ்லிமிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தையைத் தப்பாக எடைபோடாதே.)) (அமாலில் ஹூஸைன்:395)

                                                                                                                                      தொடரும்……

Check Also

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? | ஜும்ஆ தமிழாக்கம் |

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 01 …

Leave a Reply