فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ﴿١١﴾
(தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரக வாசிகளுக்குக் கேடுதான்). அல்முல்க் 67: 11
‘நிச்சயமாக மக்களின் குற்றங்கள்; நிரூபணமாகும் வரை அவர்களுக்குத் தண்டனை கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி).
நூல்: அபூதாவூத், அஹ்மத்.
அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்களால் கண்ணுற்ற பின்பு அவைகளை ஏற்று விசுவாசம் கொள்வது பயனற்றதாக ஆகிவிடும். எனவே அவனது தண்டனைகள், அத்தாட்சிகள் வரும் முன்பு அவனை விசுவாசம்கொள்வது அவசியமாகும்.
ஃபிர்அவ்னின் நிலை பற்றி அல்லாஹ் கூறுகின்ற போது பின்வருமாறு கூறுகிறான்:
(கடலில் அவன் மூழ்கடிக்கப்படும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன், நான் முஸ்லிம் என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்) இதற்கு முன் பாவம் செய்தாய் குழப்பம் செய்பவனாக இருந்தாய்).
யூனுஸ் – 90, 91.
அதைவிடத் தெளிவாக இன்னுமொரு வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
(உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்கள் செய்தவர்ளையும் தவிர. எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது).
அல் அன்ஆம் – 158.
தொடரும்……