குர்ஆனின் வரலாறு

குர்ஆனை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள், வார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள், அவ்வாறு செய்தவர்களில் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள் 323671 என்றும், வார்த்தைகள் 77439 என்றும் கூறியுள்ளனர். இவற்றில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால் எண்ணூற்று சொச்ச வார்த்தைகளே உள்ளன, அவற்றை தெரிந்து கொண்டால் குர்ஆனை பொருள் உணர்ந்து படித்துக் கொள்ளலாம்.
குர்ஆனின் அத்தியாயங்கள் 114 தான் என்றும் அவற்றின் பெயர்கள் இன்னது தான் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆயினும் சில அத்தியாயங்களுக்கு நபி (ஸல்) அவர்களே பெயர் சூட்டியுள்ளார்கள்.  சிலவற்றுக்கு ஸஹாபாக்கள் பெயர் சூட்டியுள்ளார்கள். இப்போது நம்மிடம் நடைமுறையில் உள்ள இந்த குர்ஆனின் அமைப்பு உஸ்மான் (ரலி) அவர்கள்  குர்ஆனைஒன்றுதிரட்டியகாலத்திலிருந்தேஎல்லாஸஹாபாக்களாலும்ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்துள்ளஅமைப்பாகும்.
 குர்ஆனை ஓதத் தொடங்கும்போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் விரட்டப்பட்ட ஷைத் தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூற வேண்டும்.
 أَعُوذُ بِالله من الشيطان الرجيم
بِالّلهِ
اَعُـوْذُ
அல்லாஹ்விடம்
நான் பாதுகாப்புத் தேடுகிறேன்
الرَّجِيمِ
الشَّيْطَانِ
مِنَ
சபிக்கப்பட்ட /விரட்டப்பட்ட
சைத்தான்
இருந்து/விட்டும்
நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக (அல்குர்ஆன்:16:98) என நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
 ஒரு அத்தியாயம் முடிவுற்று மற்றொரு அத்தியாயம் துவங்குகிறது என்பதை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கொண்டே அறியப்படும். அத்தவ்பா என்ற 9-வது அத்தியாயத்தை தவிர மற்றைய அத்தியாயங்களை ஓதத் தொடங்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூற வேண்டும்.  காரணம் குர்ஆன் நூல் வடிவில் தொகுக்கப் பட்டபோது அத்தவ்பா என்ற 9-வது அத்தியாயத்தில் மட்டும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்படாமலிருந்தது. அதை அப்படியே பதிவு செய்துள்ளனர்.
குர்ஆன் நூல் வடிவில் 
யமாமா போர் நடைபெற்ற பின் அபூ பக்ர்(ரலி)எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான்சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள்.அப்போது அபூபக்ர் (ரலி) கூறினார்:உமர்(ரலி) என்னிடம் வந்து, ‘இந்த யமாமாபோரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமானபேர் கொல்லப்பட்டுஅதனால் குர்ஆனின் பெரும்பகுதி போய்விடுமோ எனநான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தர விடவேண்டுமெனக் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய் வது?’ என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை தான்‘ என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தைஅல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம்வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும்(பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோதுஉமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில்அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) (பிறகு) அபூபக்ர்(ரலி) (என்னிடம்)‘(ஸைதே!)நீங்கள் புத்திசாலியான இளைஞர்உங்களை நாங்கள் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக் காக வஹீ‘ எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவேநீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரேபிரதியில்) ஒன்று திரட்டுங்கள்‘ என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக!மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அதுஎனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள்கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள்செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மைதான்‘ என்றுபதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியு றுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தைஅல்லாஹ் விரி வாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். எனவேகுர்ஆனைத் தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள்,  ஓடுகள் மற்றும் மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட் டியபோது) அத்தவ்பா‘ எனும் (வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூகுஸைமா அல் அன்சாரி (ரலி)அவர்களிடமிருந்து பெற்றேன் அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள்துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும்,  உங்கள் (வெற்றியின்)விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும் நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும்கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப்புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறுஇறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும்அவன் மகத்தானஅரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.‘ (திருக்குர்ஆன் 09:128, 129) (என்வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் அபூபக்ர்(ரலி)அவர்க ளிடம்அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர்உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின்இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.ஸைத்இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி). (புஹாரி: 4986).

Check Also

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள்  வசனங்கள் 6   இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குல் அஊது பிரப்பிந்நாஸ் …

One comment

  1. Assalamu alaikum brother in Islam Masha Allah your group doing good work May Allah accept your good deeds. Ibrahim ulavi

Leave a Reply