Home / Q&A / கேள்வி : தொழுகை ஆரம்பித்தவுடன் ஓதும் துஆ வை நான் ஓதி முடிப்பதுக்குல் இமாம் அல்பாத்திஹா ஆரம்பித்து விடுகிறார். அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : தொழுகை ஆரம்பித்தவுடன் ஓதும் துஆ வை நான் ஓதி முடிப்பதுக்குல் இமாம் அல்பாத்திஹா ஆரம்பித்து விடுகிறார். அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ் ….

கேள்வி : தொழுகை ஆரம்பித்தவுடன் ஓதும் துஆ வை நான் ஓதி முடிப்பதுக்குல் இமாம் அல்பாத்திஹா
ஆரம்பித்துடுகிறார்.
  அப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்?
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
பதில்:    இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் அவர் ஓதுவதே கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் சப்தமிட்டு ஓதுகிறார்.
குா்ஆன் ஓதப்பட்டால் நாம் மௌனமாகிவிட வேண்டும். ஓதுவதை நாம் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும் என அல்லாஹ்
குா்ஆனில் கட்டளையிட்டுள்ளான்.
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ  204 7:
      
குா்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிதாழ்த்திக் கேளுங்கள். மௌனமாக இருங்கள். நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். அல்குா்ஆன்
(
7  204)
மேலும் நபி (ஸல்) அவர்களும் இமாம் ஓதினால் பின்னுள்ளவர்கள் மௌனமாகிவிட வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்கள்.
وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا (صحيح مسلم)
இமாம் ஓதிவிட்டால் மௌனமாக இருங்கள்.
அறிவிப்பாளர் அபூ மூசா (ரலி)
நுால் (சஹீஹ் முஸ்லிம் (612)

 

இந்த உத்தரவுகளை மீறும் வகையில் தொழுகையில் நமது செயல்பாடுகள் இருக்கக்கூடாது. எனவே நீங்கள் துஆவை
ஓதிமுடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இமாம் ஓத ஆரம்பித்துவிட்டால் துஆ ஓதுவதை
நிறுத்திவிட்டு அவர் ஓதுவதை கவனமாக கேட்பதே நல்லதாகும்.

Check Also

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா?| கேள்வி பதில் |

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி உருவமுள்ள பொம்மைகளை …

Leave a Reply