ஃபிக்ஹ் பாகம் – 3
தொழுகையின் ஃபர்ளுகள்
(1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ
رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ ، فَرَجَعَ الرَّجُلُ
فَصَلَّى كَمَا كَانَ ، صَلَّى ، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَلَيْهِ ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَعَلَيْكَ السَّلَامُ ، ثُمَّ قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ لَمْ
تُصَلِّ ، حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ، فَقَالَ الرَّجُلُ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ ، مَا أُحْسِنُ
غَيْرَ هَذَا عَلِّمْنِي ، قَالَ : إِذَ قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ
الْقُرْآنِ ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ، ثُمَّ اسْجُدْ حَتَّى
تَطْمَئِنَّ سَاجِدًا ، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا
ஒரு ஸஹாபி தொழும்போது நபி (ஸல்) மீண்டும் மீண்டும் தொழச்சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். 3 வது முறையும் தொழுது விட்டு அவர் எனக்கு தொழுகையை கற்றுத்தாருங்கள் யா ரசூலுல்லாஹ் என்றார். அப்போது நபி (ஸல்) நீங்கள் தொழுகைக்காக நின்றால் தக்பீர் சொல்லுங்கள் என்றார்கள்.
🌼 நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தன் இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். (திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)
🌼 مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ.
அலீ (ரலி) – நபி (ஸல்) – தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்; அதன் தக்பீர் ஆகுமாக்கப்பட்டதெல்லாம் ஹராமாக்கி விடும், ஸலாம் கொடுப்பது அதை ஹலாலாக்கி விடும் (அஹ்மத், அபூதாவூத்,இப்னு மாஜா, திர்மிதி)