Home / Q&A / நாளின் துவக்கம் எது? மஃரிபா? ஃபஜ்ரா?

நாளின் துவக்கம் எது? மஃரிபா? ஃபஜ்ரா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,

பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC ,

அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Check Also

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? | கேள்வி பதில் |

முஸ்லிம்க்கு சொர்க்கம், காஃபிர்க்கு நரகமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி முஸ்லிம்க்கு சொர்க்கம், …

9 comments

 1. Dear brother Abbas Ali assalamu alaikkum.the day starts at fajr not at magrib.you must do research regarding hilal matter.I ask your evidences .your explanation is wrong. Wassalam.by j.jaffer Sidique Cumbum,theni dist.tan lnadu

  • அன்புச் சகோதரர் ஜாபர் சித்தீக் அவர்களுக்கு

   மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் நாளின் துவக்கம் இரவு என்பதற்கு பல ஹதீஸ்களை ஆதாரமாகக் கூறியுள்ளார்கள். இக்கருத்தை அவர் மட்டும் கூறவில்லை. இப்னு உஸைமீன் போன்ற பல சலபு அறிஞர்களும் இக்கருத்தைக் கூறியுள்ளனர்.

   இதில் நீங்கள் மாற்றுக்கருத்து கொண்டால் அவர் குறிப்பிட்ட ஹதீஸ்களுக்கு பதிலளிப்பது உங்கள் கடமை.

   நாளின் துவக்கம் பகல் தான் என்ற உங்களின் நிலைபாட்டிற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இருந்தால் அதை நீங்கள் இங்கே தாராளமாக தெரிவிக்கலாம்.

   இதைச் செய்யாமல் வெறுமனே நீங்கள் விமர்சனம் செய்வதில் எந்த நன்மையும் இல்லை.

 2. Dear Abbas Ali, before that u were in wrong concepts for ex sooniyam matter.like that with few hadees don’t come forward to wrong decision about hilal matter

 3. Hilal matter is a vast area.please gather all hadees and keenly study.expecting it favourable reply

 4. ஹாமித் அலி

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறுகளையும் நெருப்பால் நிரப்பு வானாக என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். புகாரீ – 4533.

  சூரியன் மறையும் வரை தாமதமாகியது என்றால் அந்தத் தொழுகை அஸ்ருத் தொழுகைதான் என்பது தெளிவு. ஒரு நாளைக்கு ஐவேளை கடமையான தொழுகையில், முதல் தொழுகை ஃபஜ்ராக இருந்தால் மட்டுமே அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையாக இருக்க முடியும். ஆக முதல் தொழுகை ஃபஜ்ரு என்றால் நிச்சயமாக ஒரு நாளை மக்ரிபிலிருந்து துவங்க இயலாது. பஜ்ருதான் ஒரு நாளின் துவக்கம் என்பது மிகத் தெளிவு.

  இறைத்தூதர்(ஸல்) ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுபுஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்துவிடுவார்கள். (புகாரீ: 2033)

  ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால் மக்ரிபு தொழுதுவிட்டுத்தானே நபி(ஸல்) இஃதிகாஃபுக்குள் நுழைந்திருக்க வேண்டும்? மாறாக நபி(ஸல்) ஸுபுஹுத் தொழுதுவிட்டு இஃதிகாஃபிற்குள் நுழைந்துள்ளார்கள் என்றால் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதும் நாளின் துவக்கம் மக்ரிபு எனப் பேசுவதற்கே இடமில்லை என்பதும் தெளிவாகிறது.

  ஒரு நாள் வித்தியாசம் என்பது எல்லா அமல்களையும் மாத்திவிடுகிறது,
  பிறை விசயத்தில் அதிக தெளிவை எதிர்ப்பார்க்கிறோம், இன்ஷா அல்லாஹ்

  • Por nerathil nabi avargal jammu seivarkal. First fajr second zuhar, asar third magrib isha. Payana tholohai enbatu zuhar, asar, isha(kasr tholuhai). Buhari 1090. Itil asar tan nadu tholohai. Oru velai ippadiyum irukalam. Quranilum oru vasanam , nadu tholuhai peni kolungal nu varum. Atuta vasanam porai patri varum.

 5. See quran 17:12, pagalin santrai parpatarkaha iravai manga seitom.

 6. சகோ ஹாமித் அலீ
  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  ஸலாத்துல் உஸ்தா என்பதை நீங்கள் நடுத்தொழுகை என மொழிபெயர்த்துள்ளீர்கள். ஆனால் இங்கே உஸ்தா என்பது சிறந்த தொழுகை என்பதைக் குறிக்கும் என பல அறிஞகர்கள் கூறியுள்ளனர். இச்சொல்லுக்கு இந்தப் பொருளும் உள்ளது. இந்தப் பொருளின் படி பார்த்தால் நாளின் துவக்கம் பஜ்ர் என்று நீங்கள் கூற முடியாது.

  நபியவர்கள் காலத்தில் பஜர் தொழுகை முதல் தொழுகையாக கருதப்படவில்லை. லுஹர் தொழுகை தான் முதல் தொழுகையாக கருதப்பட்டது. புகாரி 547 வது ஹதீஸை பார்க்க.

  சூரியன் உதித்தப் பிறகு முதல் தொழுகையாக லுஹர் உள்ளது.சூரியன் மறைந்த பிறகு முதல் தொழுகையாக மஃக்ரிப் உள்ளது. இந்த இரண்டிற்கும் நடுவில் அஸர் வருவதால் இதனை நடுத்தொழுகை என்று குறிப்பிடலாம். எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு நாளின் துவக்கத்தைப் பற்றி பேச முடியாது.

  நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுதுவிட்டுத் தான் இஃதிகாபிற்குள் நுழைந்தார்கள் என்று கூறியுள்ளீர்கள். இது தவறான கருத்தாகும். இது பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் சுப்ஹ் தொழுதுவிட்டு கூடாரத்திற்குள் நுழைவார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இஃதிகாபிற்குள் நுழைவார்கள் என சொல்லப்படவில்லை.

  நபியவர்கள் இரவில் பள்ளியில் இரவுத்தொழுகையை தொழுதுவிட்டு பஜரை தொழும் போதெ அவர்கள் இஃதிகாபிற்குள் நுநை்துவிடுகிறார்கள். இதன் பின் பள்ளியில் தனக்கென தனியாக ஒதுக்கப்பட்ட கூடாரத்திற்குள் நுழைகிறார்கள். எனவே இதை வைத்து நாளின் துவக்கம் பகல்தான் எனக் கூற முடியாது.

  மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் சுட்டிக்காட்டிய பல ஆதாரங்களுக்கு நீங்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே இங்கே கமான்ட் செய்யும் சகோதரர்கள் இவ்விசயத்தில் நிதானமாக ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுகிறேன்.

 7. ஹாமித் அலி

  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
  சகோதரரே தாங்கள் கூறியிருக்கும் பல பயனுள்ள கருத்துகளை பார்த்தேன், மேலும்

  ஒரு நாளின் இறுதித் தொழுகை வித்ர்:
  இறைத்தூதர்(ஸல்) மேடை மீது இருந்தபோது, இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்? என ஒருவர் கேட்டார். இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். அதிகாலையை அடைந்துவிடுவார் என அஞ்சினால் ஒரு ரக்அத் தொழுங்கள். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். (புகாரீ – 472)

  ஒரு நாளின் ஆரம்பம் மக்ரிபு என்றால், அதிகாலையை அடைந்து விடுவாரோ என்று அவர் அஞ்சத் தேவையில்லை. வித்ரு என்பது ஒரு நாளின் இறுதித் தொழுகைதானே …
  அல்லாஹ் மிக அறிந்தவன்

Leave a Reply