رَبّ
|
بِ
|
اَعُـوْذُ
|
قُلْ
|
படைத்துப் பாதுகாப்பவன்
|
கொண்டு
|
நான் பாதுகாப்புத்தேடுகிறேன்
|
நீ சொல்
|
خَلَقَ
|
مَا
|
شَرِّ
|
مِنْ
|
الْفَلَقِ
|
படைத்தான்
|
எதை
|
தீங்கு
|
இருந்து
|
வைகறை
|
وَقَبَ
|
إِذَا
|
غَاسِقٍ
|
شَرِّ
|
مِنْ
|
وَ
|
மறைந்தான்–மறைந்தது
|
அப்போது
|
இருள்
|
தீங்கு
|
இருந்து
|
மேலும்
|
اَلْـعُـقَـدِ
|
فِي
|
النَّفَّاثَاتِ
|
شَرِّ
|
مِنْ
|
وَ
|
முடிச்சுக்கள்
|
இல்
|
ஊதும்பெண்கள்
|
தீங்கு
|
இருந்து
|
மேலும்
|
حَسَدَ
|
إِذَا
|
حَاسِدٍ
|
شَرِّ
|
مِنْ
|
وَ
|
பொறாமைகொண்டான்
|
அப்போது
|
பொறாமைக்காரன்
|
தீங்கு
|
இருந்து
|
மேலும்
|
- (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்
- அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
- பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
வைகரையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், சூரியன் மறையும் போது ஏற்படும் இருளின் தீங்கிலிருந்தும், முடிச்சுக்களில் ஊதும் (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும், பொறாமைக் காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (நபியே) நீர் கூறுவீராக!.
الماضي
|
المضارع
|
الامر
|
النهي
|
خَلَقَபடைத்தான்
|
يخْلُقُபடைப்பான்
|
اُخْلُقْ
|
لا تخلق
|
وَقَـبَ
மறைந்தான்,மறைந்தது
|
يَقِـبُமறைவான்
|
قِبْ
|
لاَ تَقِـبْ
|
حَـسَـدَபொறாமைப்பட்டான்
|
يَـحْـسُـدُபொறாமைப்படுவான்
|
اُحْـسُـدْ
|
لاَ تَحْـسُـدْ
|
فَـاعِـلُ
|
فَـاعِـلَانِ
|
فَـاعِـلًـوْنَ
|
فَـاعِـلَـةٌ
|
فَـاعِـلَـتَـانِ
|
فَـاعِـلـاتُ
|
اِسْـمُ الْـفَـاعِـلِ
|
مَـصْـدَرٌ
|
مُـضَـارِعٌ
|
مَـاضٍ
|
فَـاعِـلُ
|
فَـعْلً
|
يَـفْـعَـلُ
|
فَـعَـلَ
|
غَـاسِـقٌ
|
غَـسَـقٌ
|
يَـغَـسَـقُ
|
غَـسَـقَ
|
وَأقِـبٌ
|
وَقْـبٌ
|
يَـقِـبُ
|
وَقَـبَ
|
حَـاسِـدٌ
|
حَـسَـدٌ
|
يَـحْـسُـدُ
|
حَـسَـدَ
|
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான நூல் களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.. சிலர் இதனை மறுக்கின்றனர். காரணம் நபி(ஸல்) அவர்களுக்கு சூனி யம் வைக்கப்பட்டிருந்த காலங்களில் செய்ததை செய்யாதது போல உணர்வு இருந்ததாகக் கூறுகிறார் களே அப்படியானால் எந்த எந்த வசனங்கள் அந்தச் சூழ்நிலையில் இறங்கியவை அவை சரியானதாக இருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் நபி(ஸல்) அவர்கள் வஹி வந்ததை அறிவித்தபோது அதனை ஏற்க மறுத்த காஃபிர்கள் இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள் எனவே நாம் சூனியம் வைகக்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை வைத்து ஏற்றுக் கொண்டால் அவர்கள் கூறியது உண்மையாகிவிடுமே என எண்ணுகின்றனர். குர்ஆனைப் பொறுத்தவரை அதனைப் பாதுகாக் கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டு விட்டான்.
நிச்சயமாக நாமே இந்த அறிவுரையை-குர்ஆனை இறக்கியுள்ளோம். நாமே அதனைப் பாதுகாப்போம் (15:9) எனும் வசனத்தின் மூலம் அல்லாஹ் அதனைத் தானே பாதுகாப்பதாக உத்தரவாதம் வழங்கியுள் ளான். அதுமட்டுமின்றி எல்லா மனிதர்களும் சில சில பாதிப்புகளால் இது போன்ற சூழ் நிலைக்கு ஆளாக் கப்படுவார்கள். அதனால் எல்லாவற்றையும் மறந்திருப்பாரோ என்று எவரும் எண்ணமாட்டார்கள், ஏனெ னில் உடல் நலக்குறைவால் கூட சில மாற்றங்கள், மறதிகள் ஏற்படத்தான் செய்யும. அது மட்டுமின்றி நபி(ஸல்)அவர்கள் மறந்துவிட்டதாகக்கூடக் கூறவில்லை அதுபோன்ற உணர்வு என்றுதான் கூறியுள் ளார்கள். இதுபோன்றே வஹி இறங்கியதை நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காக சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று காஃபிர்கள் கூறினார்கள். இவர் மனிதர், மனிதரால் இறைச் செய்தியைக் கொண்டு வரமுடியாது என்றும் கூறினர். சூனியம் செய்யப்படாத காலத்தில் சூனி யம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியதை அல்லாஹ்வே மறுத்து சூனியம் செய்யப்படவில்லை என்று கூறினான். அதே நேரத்தில் மனிதரையே நபியாக ஆக்கியதால் நான் ஒரு மனிதர்தான் என்று நபி யையே கூறச் செய்தான். நபி (ஸல்) அவர்களே தனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருவதால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.