Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன் / பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ .
இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
http://www.qurankalvi.com/wp-includes/js/tinymce/plugins/wordpress/img/trans.gif
اَحَدٌஏகன், هُـوَஅவன்,  اَلـصَّـمَدُதேவைகள் இல்லாதவன்لَـمْஇல்லை,
يَـلِـدْஅவன் பெற்றெடுப் பான், وَஇன்னும் / மேலும்,  يُـوْلَـدْபெறப்படுவான்,
يَـكُـنஆகிவிடுவான்كُـفُـوًاசமமானவன் / நிகறானவன்.
அல்லாஹ் ஏகன், அவன் தேவைகள் இல்லாதவன்;, அவன் யாரையும் பெறவில்லை, அவனுக்கு யாரும் பிறக்கவில்லை, அவனுக்கு யாரும், எதுவும் நிகர் இல்லை என நபியே கூறுவீராக!
يَـلِـدْ, يُـوْلَـدْ, يَـكُـنْ ஆகிய மூன்றும் வருங்கால வினைச் சொற்கள்.
ஆனால் இவற்றுக்கு சென்ற காலத்தின் அர்த்தம் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் لَـمْ என்ற எழுத்து வருங்கால வினைச் சொல்லில் புகுந்து
விட்டால் அதை கடந்த கால எதிர்மறை வினைச் சொல்லின் அர்த்தமாக
ஆக்கிவிடும். அத்துடன் கடைசியில் இருக்கும் லம்மைப் போக்கிவிட்டு
சுகூன் செய்துவிடும். இந்த சுகூனுக்கு இலக்கணத்தில் جَـزْمُஎன்று
கூறுவார்கள். இந்த لَـمْ இன்னும் சில வேலைகளையும் செய்யும். அது அந்த
இடம் வரும் போது கூறப்படும். இந்த لَمْ க்கு حَـرْفٌ جَـازِمٌ (ஜஸ்முச் செய்யும்
எழுத்து) என்றும் அதை அடுத்துள்ள வினைச் சொல்லுக்கு مَـجْـزُوْمٌ (ஜஸ்முச்
செய்யப்பட்டது) என்றும் கூறப்படும்.
இந்த அத்தியாயத்தில் هُـوَ என்ற வார்த்தையின் அர்த்தம் விடப்பட்டுள்ளது, ஏனெனில் பேச்சு
வழக்கில் எனவே, அதாவது என்று கூறுவது போல இதைச் சில சந்தர்பங்களில் பயன்படுத்தப்படும்.
  نَـهْـيٌ விலக்கல்
  اَمْـرٌ
 ஏவல்
  مُـضَـارِعٌ
வரும் / நிகழ் காலம்
   مَاضٍ
சென்றகாலம்
 لَا تَـلِـدْபெறாதே
  لِـدْ பெறு
  يَـلِـدُ
பெறுவான், பெறுகிறான்
  وَلَـدَபெற்றான்
———-
——–
  يُـوْلَـدُ
பெறப்படுவான்,
பெறப்படுகிறான்
  وُلِـدَ பெறப்பட்டான்
 لَا تَـكُـنْ ஆகாதே
 كُـنْ  ஆகு
  يَـكُـوْنُ ஆகுவான்,ஆகுகிறான்
 كَـانَஆகிவிட்டான்
2 لم , و, ل  هو, الله, احد, الصمد, كفوا 1
இந்த அத்தியாயம் இறங்கியதற்குக் காரணம்: இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே!
உமது இறைவனின் வம்சவழியை எங்களுக்குக் கூறுங்கள் எனக் கேட்டர்கள். அப்போது தான் அல்லாஹ் இந்த
அத்தியாயத்தை இறக்கினான். (அறிவிப்பாளர்உபய்யு பின் கஅப் (ரலி), (திர்மதி)
 சிறப்புநபி(ஸல்)அவர்கள் ஒருவரை ஒரு படைக்குப் பொறுப்பாளராக அனுப்பி வைத்தார்கள். அவர் தனது
நண்பர்களுக்கு இமாமாக தொழுகை நடத்தினார். அவர் தொழுகையில் குல்ஹீவல்லாஹ்வை ஓதிமுடித்துக்
கொண்டிருந்தார். அவர்கள் நபியிடம் திரும்பி வந்தபோது இதனைக் கூறினார்கள். அப் போது நபி(ஸல்) அவர்கள்
ஏன் இதைச் செய்தாரென அவரிடமே கேளுங்கள் என்றார்கள். அவரிடம் கேட்டபோது இது ரஹ்மானுடைய
பண்புகள் எனக் கூறி, அதை ஓதப் பிரியப்படுகிறேன் என்றார். அப் போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் அவரை
நேசிக்கிறான் என அவருக்கு அறிவித்துவிடுங்கள் என்றனர்.(அறிவிப்பாளர்ஆயிஷா (ரலி),( புகாரி)
குபா பள்ளியில் அன்ஸாரிகளில் ஒருவர் அங்குள்ள மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார், அவர்
தொழுகையில் (ஃபாத்திஹா சூராவிற்குப்பின்) ஓத ஆரம்பிக்கும் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹீ வல்லாஹ்வை ஓதி
முடித்துவிட்டுத்தான் வேறு சூராவை ஆரம்பிப்பார். அம்மக்கள் அவரிடம் நீங்கள் குல் ஹீவல்லாஹ்வை
ஆரம்பிக்கிறீர்கள். பின்னர் இது போதாது எனக் கருதி வேறு ஒரு சூராவையும் ஓதுகிறார்கள். இப்படிச் செய்யாது
குல்ஹீவல்லாஹ்வை மட்டும் ஓதுங்கள் அல்லது வேறு ஒரு சூராவை ஓதி விட்டு குல்ஹீவல்லாஹ்வை விட்டு
விடுங்கள் எனக் கூறினர்., நான் இவ்வாறு ஓதும் முறையை விடமாட்டேன் நான் உங்களுக்குத் தொழுகை நடத்த
விரும்பினால் இமாமாக இருந்து தொழவைக்கிறேன். விருப்பமில்லை யென்றால் விட்டுவிடுகிறேன் என்றார். ஆனால்
அவர்களோ அவரை தங்களில் சிறந்த வராகவும் அவரல்லாதவர் தங்களுக்கு தொழுகை நடத்துவதை
வெறுப்பவர்களாகவும் இருந்தனர். இவர் கள் நபியிடம் வந்த போது இத்தகவலை அறிவித்தனர். அப்போது நபி(ஸல்)
அவர்கள் அவரிடம் நண்பரே! உம்முடைய நண்பர்கள் கூறுவது போல நீர் செய்வதில் எது உனக்குத் தடையாக உள்ளது
என்றும் ஒவ்வொரு ரக்அத்திலும் கட்டாயமாக இதை ஓத வேண்டுமென்று விருப்பம் ஏற்பட்டது ஏன்?
என்றும் கேட்டார்கள். அதற்கு அவர் திண்ணமாக இதனை நான் விரும்புகிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதனை நீர் விரும்புவது உம்மை சுவனத்தில் நுழையச் செய்யும் என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), (புகாரி)
உங்களில் ஒருவர் ஓர் இரவில் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓத சக்தி பெறுவாரா? எனக்கேட்டார் கள். அதற்கு
அவர்கள் இப்படிச் செய்வதற்கு இயலாதவர்களாக இருக்கிறோம் என்றனர். கண்ணியமிக்க அல்லாஹ் குர்ஆனை
மூன்று பகுதிகளாக்கியுள்ளான். குல்ஹீவல்லாஹ் அம்மூன்றில் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளான் என்றார்கள்.
(அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), (அஹ்மது)
மழையும் கடும் இருளுமாக இருந்த ஓர் இரவில் ரசூல்(ஸல்)அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவ தற்காகத்
தேடிப் புறப்பட்டோம். அவர்களை நாங்கள் பார்த்து விட்டபோது அவர்கள் எங்களிடம் தொழு தீர்களா? என்றார்கள்.
நான் எதுவும் கூறவில்லை. பின்னர் சொல் என்றார்கள். நான் எதுவும் கூறவில்லை. பின்னரும் சொல் என்றார்கள்.
நான் எதுவும் கூறவில்லை. அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! என்ன கூற என்று கேட்டேன்? காலையிலும்
மாலையிலும் குல்ஹீ வல்லாஹ் அஹதையும் பாதுகாப்புத் தேடு வதற்காக அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய
இரண்டையும் கூறு. அவை எல்லாவற்றுக்கும் உனக்குப் போது மானதாகும் என்றார்கள். (அபூதாவூத்அஹ்மத்,
அப்துல்லாஹ் பின் குபைப் அவர் தந்தை மூலம்)
குறிப்பு: இதுவரை சென்றுவிட்ட மூன்று அத்தியாயங்களின் துவக்கத்தில்
قُلْ என்ற فِعْلُ الْاَمْر (ஏவல் வினை) உள்ளது, இந்த الْاَمْرمُـضَـارِعٌ ல் இருந்து எடுக்க
வேண்டும், சென்ற கால வினைச்சொல் லிலிருந்து வருங்கால
வினைச்சொல் எடுக்கப்படும். مَاضٍ مُـضَـارِعٌ ஆக்க مَاضٍ ன்ஆரம்பத்தில்مُـضَـارِعٌ
ன் அடையாள எழுத்துக்களானن,ا,ت,ي ஆகியநான்கில்ஒன்றைச்
சேர்க்கவேண்டும்.
فِعْلُ الْاَمْر எடுப்பதற்கு மூன்று முறைகள் உள்ளன.
 1 مُـضَـارِعٌ ன் அடையாள எழுத்தைப் போக்கிவிட்டு அதற்கு அடுத்த
எழுத்தைப் பார்க்கவேண்டும் அதற்கு حَـرَكَـةُ இருந்தால் கடைசி எழுத்துக்கு
சுகூன் செய்யவேண்டும். يقول என்ற مُـضَـارِعٌ ன் அடையாள எழுத்தான ي வை
போக்கி பின்னர் அதற்கு அடுத்த எழுத்துக்கு حَـرَكَـةُ இருப்பதால் கடைசி
எழுத்துக்கு சுகூன் செய்யவேண்டும். சுகூன் செய்யும்போது இரண்டு சுகூன்
உள்ள எழுத்துக்கள் சந்திப்பதால் و ஐப் போக்கி قُلْ என்று கூற வேண்டும்.
2 ஆவது 3 ஆவது مُـضَـارِعٌ ன் அடையாள எழுத்தைப் போக்கிவிட்டு அதற்கு
அடுத்த எழுத்தைப் பார்க்கவேண்டும் அதற்கு சுகூன் இருந்தால் அதற்கு
அடுத்த எழுத்தைப் பார்க்க வேண்டும் அதற்கு فَـتَـحُ அல்லது كَـسَـرُ இருந்தால்
அதன் ஆரம்பத்தில் كَـسَـرُஉள்ள ا ஐச் சேர்த்து கடைசிக்கு சுகூன் செய்ய
வேண்டும், يَفْتَحُ يَضْرِبُ என்ற مُـضَـارِعٌ ல் اِفْتَحُ اِضْرِبُ என்பது போல. ضَّـمُّ இருந்தால் அதன்
ஆரம்பத்தில் ضَّـمُّ உள்ள ا ஐச் சேர்த்து கடைசிக்கு சுகூன் செய்ய வேண்டும்.
உதாரணமாக يَـحْـسُـدُ يَـخْـلُـقُ என்ற مُـضَـارِعٌ ல் اُحْـسُـدْ, اُخْـلُـقْ என்பதுபோல.
குறிப்பு: فَـتَـحُ, كَـسَـرُ, ضَّـمُّ ஆகிய மூன்றுக்கும் حَـرَكَـةُ என்று கூறப்படும், صَمَدٌ,كُفُوٌ என்ற
இரண்டும்  مصدر ஆகும்.

Check Also

குர்ஆனின் வரலாறு

குர்ஆனை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள், வார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள், அவ்வாறு செய்தவர்களில் குர்ஆனிலுள்ள …

2 comments

  1. ,uA, A-1,1_M.Y..M.Hameed Jawahar Ali Maraicar

    Alhamththulilah Allah ungal seyalgalai maylum alahakuvan naan ikklaasas,falak naass Aayaththukurush 5thu neeram thoolukaigal mudiththavudan oothivarugireen F-3,L-1, A-1M-3, I-1Allah enmaielum marumaielum entha aayaththugal maylum maylum engalukkum ungallukkum erulaga nairbaaakiyangal Valangkuvaanaag

  2. M.Y..M.Hameed Jawahar Ali Maraicar

    Alhamththulilah Allah ungal seyalgalai maylum alahakuvan naan ikklaasas,falak naass Aayaththukurush 5thu neeram thoolukaigal mudiththavudan oothivarugireen F-3,L-1, A-1M-3, I-1Allah enmaielum marumaielum entha aayaththugal maylum maylum engalukkum ungallukkum erulaga nairbaaakiyangal Valangkuvaanaag

Leave a Reply