”மக்கா உயிர்ச்சேதமும் பஷ்ஷாரின் படுகொலைகளும்” ஈரானின் இரட்டை நிலை”
ஸஊதியில் இவ்வருடம் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்த கோரமான நிகழ்வை விளம்பரமாக்கி ஈரான் அரசியல் செய்வது அனைவரும் அறிந்தது. ஈரானிய அதிபர் ஹஸன் ரவ்ஹானி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஸஊதியிடம் ஹஜ்ஜை நிர்வகிக்கும் திறமை இல்லை என்றும் முஸ்லிம் நாடுகளிடம் அதனை ஒப்படைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
சில பொழுதுகளில் வரலாறு அறியாதவர்கள் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு கருத்து வெளியிபவர்கள் இதனை ஞாயமாகக் கருதலாம். அதுபோல் ஹஸன் ரவ்ஹானிக்கு உலக முஸ்லிம்கள் மீது எவ்வளவு அக்கறை என்று கூட எண்ணலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல
இம்மாதம் 28ம் திகதி நிவ்யோக்கிலே நடைபெற்ற ஐக்கியநாடுகள் கூட்டத்திலே பேசிய ரவ்ஹானி “பஷ்ஷாரின் ஆட்சி தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் வரக்கூடாது. அவரது ஆட்சி நீடிப்பதுதான் தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அணுகூலமாக இருக்கும்” என தெளிவாக தெரிவிக்கிறார்.
இவ்வளவு கொடுமைகளைப்பார்த்த பின்னும் பஷ்ஷார் விடயத்தில் ஹஸன் ரவ்ஹானியின் நிலை இதுவாயின் அஹ்லுஸ்ஸுன்னாவைப் பற்றிய ஈரம் அவரது இதயத்தில் உண்டு என்று நம்ப முடியுமா!?.
இதற்கு முன்னொரு தடவையில் பஷ்ஷார் போராளிகளுக்கெதிராகவும் அவர்களை ஆதரிக்கும் பொது மக்களுக்கெதிராகவும் நச்சுவாயுக்களை பயன்படுத்துகிறாரே என்று வினவப்பட்ட போது “இது ஆதாரமற்றது எங்கிருந்து உங்களுக்கு இந்த செய்தி கிடைத்தது?” என்று நிரூபரைத் திருப்பிக் கேட்டார்.
உலகமே சொல்லும், பஷ்ஷாரின் ஆதாரவாளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளும், வீதியோரம் கதறி ஓடும் அகதிகள் தரும் உறுதியான ஒரு தகவலை சகட்டுமேனிக்கு மறுத்துரைத்து பஷ்ஷாரின் கொடுமைக்கு அங்கீகாரம் வழங்கும் ஹஸன் ரவ்ஹானி மக்கா ஷுஹதாக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
மினா உயிர்ச்சேதங்களை விசாாிக்க வேண்டும் என்று ஐநாவில் அழுத்தங் கொடுத்த ரவ்ஹானி பஷ்ஷார் நிலைக்க வேண்டும் என்று சொன்னது அவரது ஷீயா அரசியலை தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியது
மினாவின் எதிர்பாராத நிகழ்வை ஸல்மானுக்கு பொறுப்பேற்கச் சொல்லும் ரவ்ஹானி பஷ்ஷாரின் படுகொலைகளை ஞாயப்படுத்துவது ஷீயா அரசியல் சிவப்பு நிறமானது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது
சொந்த நாட்டு மக்களை சாதாரண அரசியல் முரண்பாடுகளுக்கெல்லாம் மரணதண்டனை நிறைவேற்றி வரும் வன் நெஞ்சம் கொண்டவர். இந்த மாதம் நிவ்யோக் சென்ற ரவ்ஹானிக் கெதிராக ஆயிரக்கணக்கான அமெரிக்க ஈரானியர்கள் இந்த மனிதாபிமானமற்ற செயல்களுக்காக பெரும் ஆர்ப்பட்டம் செய்து கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். ரவ்ஹானியின் அரசியல் ரீதியான மற்றும் சாதரண குற்றங்களுக்கான மரண தண்டனைகள் 2000 நபர்களை தாண்டிவிட்டன.விபரங்களுக்கு பின்வரும் ஈரானிய இணையதளத்தை பார்க்கவும்
இவரது மோசமான அரசியல் போக்கை அப்பொழுதே தெரிந்த இவரது மகன் ஹுஸைன் 90களில் நண்பர்களுக்கு பதில் சொல்ல மடியாத நிலையில் வெட்கம் பொறுக்கமல் தற்கொலை செய்து கொண்டார். (முற்றும்)