ஷஃபான் 15 வது தினத்தை பராஅத் என சிறப்பிப்பது தொடர்பாக மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்:
தொகுப்பு: மௌலவி அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
ஷஃபான் மாதத்தின் 15 வது இரவை சிறப்பிப்பது, அந்த இரவில் நின்று வணங்குவது, அன்றைய தினத்தில் நோன்பு நோற்பது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவைகளே! எதுவும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.
அறிஞர் இப்னுல் அரபி ரஹிமஹுல்லாஹ் தனது “ஆரிலதுல் அஹ்வதீ” எனும் நூலில்: “ஷஃபானின் 15 இரவு தொடர்பாக இடம் பெற்ற எந்த செய்தியும் கேட்கக் கூடியதாக (ஏற்கக்கூடியதாக) இல்லை” எனக் குறிப்பிடுகின்றார் (201/2).
அஷ்ஷைக் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் தனது மஜ்மூஉல் பஃதாவா எனும் நூலில் (192 /1) “ஷஃபானின் 15 வது இரவு தொடர்பாக இடம் பெற்ற செய்திகள் பலவீனமானவைகள்” இன்னொரு இடத்தில் (197/ 1) “அவைகள் ஆதாரப் பூர்வமானவகைள் அல்ல” எனக் குறிப்பிடுகின்றார்.
அஷ்ஷைக் இப்னு உஸைமின் ரஹிமஹுல்லாஹ் தனது மஜ்மூஉல் பஃதாவா எனும் நூலில் (280/7): “ஷஃபானின் 15 வது இரவை தொழுகையின் மூலம் சிறப்பிப்பது, அன்றைய தினம் நோன்பிருப்பது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவைகள்” எனக் குறிப்பிடுகின்றார். மற்றுமொரு இடத்தில்: (30/ 20): “ஷஃபான் 15 இரவில் குறிப்பிட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட தொழுகைகள் தொழுவது தொடர்பக வந்த செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள்” எனக்குறிப்பிடுகின்றார்.