Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 39

மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும்.

🌺 சூரா அஸ்ஸஜ்தா 32:11

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு ஒரு தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

💠 முன்கர் நகீர் கபரில் விசாரிப்பவர்கள்.

💠 ரகீப் அதீத் வலப்புறமும் இடப்புறமும் இருந்து நம்முடைய நன்மை தீமைகளை எழுதும் மலக்குகள்.

💠 அது அவர்களின் தனிப்பட்ட பெயர்களா அல்லது அல்லாஹ்வால் நியமிக்க பட்ட அந்த குழுவின் பெயரா என்று நாம் அறியமுடியவில்லை.

💠 சொர்க்கத்தின் காவலாளி மலக்கு ரிள்வான் என்ற பெயரில் கருத்துவேறுபாடு இருக்கிறது.

💠 நரக காவலாளி மாலிக் என்பது குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

இஸ்ராஃபீல் என்ற மலக்கின் பெயரை நாம் ஹதீஸில் காண்கிறோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply