Home / கட்டுரை / கட்டுரைகள் / அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1 | கட்டுரை

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1 | கட்டுரை

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1

 

ஆசிரியர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்,

 

தினமும் நாம் பல தடவைகள் ஓதிவரும் ஸூரா பாதிஹா பற்றிய சில சிந்தனைகள்

இவ் அத்தியாயம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மத்தியில் இருபாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இய்யாகநஃபுது வரைக்கும் அல்லாஹ்வுக்குரியது இதற்குப் பின்வருபவைகள் அடியானுக்குரியதாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)
என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ் என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான்.

அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்)
என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ் என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான்.

அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால் அல்லாஹ் என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான்.

மேலும் அடியான் இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்)
என்று சொன்னால் அல்லாஹ் இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.

அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த அலைஹிம் ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால்இ அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். முஸ்லிம்:655

எனவே தொழுகையில் நாம் இதனை நமது சிந்தனையில் கொண்டுவருவதன் மூலம் பயபக்திமிக்க தொழுகையாக அதனை நாம் மாற்றலாம்.

முதல் மூன்று வசனங்களும் நமக்கு வழங்கும் சிந்தனைகள்:

1- நீங்கள் பரிபூரணம் மிக்க அமைப்பு மற்றும் பண்புகளுக்காக புகழ்வதாயிருந்தால் அல்லாஹ்வாகிய நான் மாத்திரமே அதற்குத் தகுதியுடையவன்.

2- அருட்கொடைகளுக்காக புகழ்வதாயிருந்தால் அகிலங்களின் ரப்பாகிய நானே அதற்கும் தகுதியுடைவன்.

3- எதிர்காலத்தில் எதிர்பார்ப்பு வைத்து புகழ்வதாயிருந்தாலும் அருள்நிறைந்த அருள் வழங்கும் நானே அதற்கும் தகுதியானவன்.

4- பயத்தின் காரணமாகப் புகழ்வதாயிருந்தாலும் மறுமை நாளின் அதிபதி என்றவகையில் அதற்கும் நானே தகுதியானவன். அலூஸி:1/86

இவ்வாறு அல்லாஹ்வைப் புகழ்வதற்கான நான்கு காரணங்களை இவ்வசனங்கள் உள்ளடக்கியுள்ளன.

இன்ஷா அல்லாஹ் தொடரும் ….

Check Also

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? | ஜும்ஆ தமிழாக்கம் |

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 01 …

Leave a Reply