Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / இரண்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

இரண்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

இரண்டாவது பாடம்

Full Lesson:

பாடம்:

الْكَلِمَاةُ الْجَدِيْدُ: 

தலைவர் – اِمَامٌ    ; கல் – حَجَرٌ     ;சர்க்கரை – سُكَّرٌ    ; பால் – لَبَنٌ

 

ذَلِكَ – அது:

ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும்.

இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும்.

اِسْمُ الاِشَارَةُ :

தூரத்தில்  உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில்  உள்ளதை சுட்டிக்காட்ட உதவும் ஒரு சுட்டுபெயர்ச்சொல். 

ذَلِكَ 
ذَ – اِسْمُ الاِْشَارَةُ

لِ – اَللَّامُ لِلْبَعِيْدِ

كَ – حَرْفٌ خِطَابٌ

جُمْلَةٌ – வாக்கியம் :

அரபியில் வாக்கியங்கள் இரு வைப்படும். ஒரு வாக்கியம் பெயர்ச்சொல்லைக் கொண்டு தொடங்கினால் அது பெயர்ச்சொல் வாக்கியம் எனப்படும். இதை அரபியில் الْجُمْلَةُ الْاِسْمِيَّةُ என்று சொல்லப்படும்

ஒரு வாக்கியம் வினைசொல்லைக் கொண்டு தொடங்கினால் அது வினைச்சொல் வாக்கியம் எனப்படும். இதை அரபியில் الْجُمْلَةُ الْفِعْلِيَّةَ என்று சொல்லப்படும்

 

الْجُمْلَةُ الْاِسْمِيَّةُ – பெயர்ச்சொல் வாக்கியம்:

  1. مُبْتَدَأٌ  
  2. خَبَرٌ

எழுவாய் – مُبْتَدَأٌ:    

எதைக்கொண்டு ஒரு வாக்கியத்தை  ஆரம்பம் செய்கிறோமோ அது  எழுவாய்  مُبْتَدَأ எனப்படும். مُبْتَدَأ எப்போதும் مَرْفُوْعٌ ஆக வரும்.

உதாரணம்;

நாற்காலி உடைந்திருக்கிறது – الْكُرْسِيُّ مَكْسُوْرٌ

இந்த வாக்கியத்தில் நாற்காலி என்பது مُبْتَدَأَ

பயனிலை خَبَرٌ :

ஒரு வாக்கியத்தில் எழுவாய் சொல்ல வரும் செய்தி خَبَرٌ எனப்படும். خَبَرٌ எப்போதும் مَرْفُوْعٌ ஆக வரும்

உதாரணம்;

நாற்காலி உடைந்திருக்கிறது – الْكُرْسِيُّ مَكْسُوْرٌ  

இதில் நாற்காலி உடைந்திருக்கிறது என்று நாற்காலியைப் பற்றிய செய்தியை சொல்வதால் خَبَرٌ ,مَكْسُوْرٌ  ஆக வருகிறது.

 

இலக்கணப் பகுப்பாய்வு :

 

இணைக்கும் இடைச்சொல் – و 

இங்கு இரு வாக்கியங்களை இணைத்ததால் இந்தو விற்கு இணைக்கும் 

இடைச்சொல் என்று பெயர் (حَرْفٌ عَطْفٌ )

உதாரணம்;

இது குதிரை மேலும் இது கழுதை – هَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار

 

 

 

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply