Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 11

இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம்.

  1. மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல்.
  2. மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல்.

விளக்கம்

நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை.

இஸ்லாம் கூறும் தண்டனை

ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்று அறிந்தே அனுபவிப்பார்கள்.

ஸூரத்துல் முல்க் 67:11

فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ‌ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏

  (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

ஸூரத்துந் நாஜிஆத் 79:35

يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ‏

  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

ஸூரத்துல் ஃபஜ்ரி 89:23

وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏

➥   அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

من كان يؤمن بالله واليومن الآخر فليكرم ضيفه

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் (புஹாரி, முஸ்லீம்).

من كان يؤمن بالله واليومن الآخر فليقل خيرا أوليصمت

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும் அல்லது வாய்மூடி மௌனமாக இருக்கட்டும் (புஹாரி, முஸ்லீம்).

من كان يؤمن بالله واليومن الآخر فليكرم جاره

அபூஹுரைரா (ரலி) – யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் அண்டை வீட்டாருக்கு நல்லதையே செய்யட்டும் (புஹாரி, முஸ்லீம்).

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply