Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கடமையான குளிப்பு பாகம் – 4

கடமையான குளிப்பு பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

கடமையான குளிப்பு

الغسل – குளிப்பு

ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை

மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்

❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க வேண்டும் அதே நேரம் இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிக்க வேண்டிய அவசியமில்லை

❀ ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்து இந்திரியத்தை காண்கிறார் ஆனால் தூக்கத்தில் உணர்ச்சி வந்ததை அறியவில்லையென்றாலும் குளிக்க வேண்டும். ஏனெனில் அவர் தூக்கத்தில் நடந்ததை அறியாமல் இருக்கிறார்.

❀ ஒரு மனிதர் தன்னுடைய ஆடையில் இந்திரியத்தை கண்டார் அவர் அது எப்போது வெளியானதை அறியவில்லையென்றால், எந்த தூக்கத்தில் அது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ அப்போது முதல் உள்ள தொழுகைகளை குளித்து விட்டு மீட்ட வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply