Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾ 
 (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16
  
இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் பிற்படுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
(வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்) ஃபாத்திர் – 41.
மேலும் (வானத்தில் உள்ளவன்) எனும் வார்த்தை மூலம் அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. மேலும் அல்குர்ஆனில் தெளிவாக ஏழு இடங்களில் அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்பதை விளக்குகிறான்.
1.     (உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்)
  அல் அஃராஃப் – 54.
2.     (உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும்,  பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்)
யூனுஸ் – 3.
3.     (நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்) அர்ரஃது – 2.
4.     (அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்) தாஹா – 5.
5.     (அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்) அல் ஃபுர்கான் – 59.
6.     (வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்) அஸ்ஸஜதா – 4.
7.     (வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்) அல் ஹதீத் – 4.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply