Home / Non Muslim program / கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

கேள்வி எண்: 38

இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட
இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்:
1. ஒவ்வொரு காலகட்டத்திலும், இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளது:
அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃதுவின் 38வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘..ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது..” (Al Quran – 13:38)
2. அருள்மறை குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறை வேதங்கள் நான்கு: தௌராத் – ஷபூர் – இன்ஜில் – மற்றும் குர்ஆன் என நான்கு இறை வேதங்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. தௌராத் வேதம் நபி மூஸா (அலை)
அவர்களுக்கும், “ஷபூர் வேதம் நபி தாவூத் (அலை) அவர்களுக்கும், இன்ஜில் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும், இறுதிவேதமான அருள்மறை குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளப்பட்ட வேதங்களாகும்.
 
3. அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக அனுப்பப்பட்டதாகும்.
அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக, அவர்களுக்குரிய காலத்தில் பின்பற்றப் படுவதற்காக மாத்திரம் அனுப்பப்பட்டதாகும்.
 
4. அருள்மறை குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதமாகும்.
அருள்மறை குர்ஆன், இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி வேதம் என்பதால், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பப்பட்ட இறைவேதம்
அல்ல. இவ்வுலகில் உள்ள முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதம்தான் அருள்மறை குர்ஆன்.
அ. இதைப் பற்றிய செய்தியை அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம் ஸு ரத்துல் இபுறாஹீம் -ன் முதலாவது வசனம் கீழ்கண்டவாறு அறிவிக்கிறது:
“அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும். மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்…(Al Quran – 13:38),
ஆ. இதே போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம் ஸுரத்துல் இபுறாஹீம் – ன் 52 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும், (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். ..(Al Quran –13:38),
இ. அருள்மறை குர்ஆனின் 02வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 185 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு
(முழுமையான)வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளை கொண்டதாகவும்: (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டது….(Al Quran –2:185)
ஈ. மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 41வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை
உம்மீது இறக்கியருளினோம்..”(Al Quran –39:41)
 
5. எந்த இறைவேதம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது?.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
என்கிற கேள்வியை பொருத்தமட்டில் – அருள்மறை குர்ஆனிலோ அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளிலோ இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆகவே அருள்மறை குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களின்
அறிவிப்புகளிலோ இந்து வேதங்களை பற்றியோ அல்லது மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்கள் பற்றியோ குறிப்பிடப்படாததால், அவைகள் இறைவேதம்தான் என்று நிச்சயமாக யாரும் சொல்ல முடியாது. அவைகள் இறைவேதங்களாக இருந்தாலும் இருக்கலாம். அல்லது இறைவேதங்களாக
இல்லாமலும் இருக்கலாம்.
 
6. இந்து வேதங்கள் இறைவேதங்களாக இருந்திருந்தாலும், இன்று நீங்கள் இறைவேதமாக ஏற்று, பின்பற்ற வேண்டியது அருள்மறை குர்ஆனைத்தான்.
இந்து வேதப் புத்தகங்களோ அல்லது வேறு வேதப்புத்தகங்களோ, இறைவேதமாக இருந்திருந்தால், அந்த வேதங்கள் அந்த காலத்தில் வாழ்ந்திருந்த மக்களுக்காக- அவர்கள் வாழ்ந்திருந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் பின்பற்றப்படுவதற்காக – அனுப்பப்பட்டதாகும்.
இன்று, இந்தியா உட்பட உலகத்தில் உள்ள மனித குலம் முழுவதும் இறைவனின் இறுதி வேதமாம் அருள்மறை குர்ஆனை மாத்திரமே பின்பற்ற வேண்டும். அதோடு இல்லாமல் – அருள்மறை குர்ஆனுக்கு முந்தைய எல்லா வேதங்களும் நிலையாக பின்பற்றப் படக் கூடாது என்கிற காரணத்திலோ
என்னவோ – வல்லோன் அல்லாஹ் – அவ்வேதங்களை அவை இறக்கியருளப்பட்ட அவைகளின் உண்மையான வடிவிலே பாதுக்காக்கவில்லை போலும்.
அருள்மறை குர்ஆனைத் தவிர, உலகில் உள்ள முக்கிய மதங்களின் இறைவேதங்கள் என்று சொல்லப்படுகின்ற எதுவும், மாற்றப்படாமலோ,
கலப்படம் செய்யப்படாமலோ, இடைச் செருகல்கள் செருகப்படாமலோ இல்லை. அருள்மறை குர்ஆன் நிலையாக பின்பற்றப் படவேண்டும் என்கிற காரணத்தினால் அருள்மறை குர்ஆன், அதன் உண்மையான வடிவம் அழியாமல் இருக்கவும், எவ்வித தீங்கும் நேராமல் இருக்கவும் அல்லாஹ்வே
பாதுகாவலனாக இருக்கிறான். அருள்மறை குர்ஆனின் 15வது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் 09வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது)
இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும்
இருக்கிறோம்..” (Al Quran –15:9).

Check Also

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா?| கேள்வி பதில் |

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி உருவமுள்ள பொம்மைகளை …

Leave a Reply