Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 75

 வசனம் – 37

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ

يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ

 சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ

தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ

 ஜகாத் கொடுப்பதிலிருந்தும் ↔ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌

ۙஅந்த நாளை அஞ்சுவார்கள்  يَخَافُوْنَ يَوْمًا

உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும் அதில் தடுமாறும் تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

சூரா அல் பகறா 2 : 281

اتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்.

 வசனம் : 38

وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ

شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏

அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பான் ↔  لِيَجْزِيَهُمُ اللّٰهُ

அவர்கள் செய்த அமல்களுக்கு மிக அழகானதை اَحْسَنَ مَا عَمِلُوْا

அவனுடைய அருளிலிருந்து அதிகப்படுத்துவதற்காகவும் وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் அளிக்கிறான்  وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ

கணக்கின்றி கொடுக்கிறான் بِغَيْرِ حِسَابٍ‏ 

அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply