Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 91

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 91

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 91

 வசனம் : 50

اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ

الظّٰلِمُوْنَ

அவர்களுடைய உள்ளத்தில் நோயா இருக்கிறது? ↔ اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ 

  அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? ↔ اَمِ ارْتَابُوْۤا

اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ

அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா?

அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள். ↔ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ 

அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.

💠 உமர் (ரலி) -நபி (ஸல்) வின் இரகசியக்காப்பாளரான ஹுதைபா (ரலி) இடம்-நபி (ஸல்) உங்களிடம் முனாபிக்குகளின் பட்டியல் உங்களிடம் தந்துள்ளார்கள் அதை எனக்கு காட்டுங்கள் என்றார்கள். அதை தர ஹுதைபா (ரலி) மறுத்தவுடன் அதில் என்னுடைய பெயர் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.

💠 அபூபக்கர் (ரலி) வழியில் ஹன்ளலா (ரலி) யிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது ஹன்ளலா முனாஃபிக்காகிவிட்டேன் என்றார்கள்-ஏன் என்று கேட்டபோது-நபி (ஸல்) வின் சபையில் ஈமான் அதிகரிக்கிறது ஆனால் பிறகு ஈமான் குறைகிறது. இது முனாஃபிக்கின் நிலையல்லவா என்றார்கள் அப்போது அபூபக்கர் (ரலி) வும் எனக்கும் அப்படி தான் இருக்கிறது என்று கூறி இருவரும் நபி (ஸல்) விடம் தீர்ப்பு கேட்டு சென்றார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply