Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொடர் உதிரப்போக்கு 2

தொடர் உதிரப்போக்கு 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொடர் உதிரப்போக்கு

(2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்:

🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்).

எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?

🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும்

(அல்லது)

🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை குளிக்க வேண்டும்.

லுஹருடைய முடிவின் நேரம் வரை காத்திருந்து குளித்துவிட்டு லுஹரை தொழுத உடன் அஸருடைய நேரம் வந்து விடும் உடனடியாக அஸரை தொழுது விட வேண்டும். பிறகு இதே போன்று மக்ரிபையும் இஷாவையும் குளித்து விட்டு தொழ வேண்டும். சுபுஹ் தொழுகைக்கும் இதே போன்று குளித்து விட்டு தொழ வேண்டும்.

🌺 كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ،

فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً ، فَمَا تَرَى فِيهَا ؟

قَدْ مَنَعَتْنِي الصَّلاةَ وَالصَّوْمَ ، قَالَ : ” أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ ، فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ ” ،قَالَتْ 

هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ ، قَالَ : ” فَاتَّخِذِي ثَوْبًا ” ، قَالَتْ : هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ ، إِنَّمَا أَثُجُّ

ثَجًّا ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” سَآمُرُكِ بِأَمْرَيْنِ أَيَّهُمَا فَعَلْتِ أَجْزَأَ

عَنْكِ مِنَ الآخَرِ ، فَإِنْ قَوِيتِ عَلَيْهِمَا ، فَأَنْتِ أَعْلَمُ ” ، قَالَ لَهَا : ” إِنَّمَا هَذِهِ رَكْضَةٌ

مِنْ رَكَضَاتِ الشَّيْطَانِ ، فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ فِي عِلْمِ اللَّهِ ، ثُمَّ اغْتَسِلِي 

حَتَّى إِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ ، وَاسْتَنْقَأْتِ فَصَلِّي ثَلاثًا وَعِشْرِينَ لَيْلَةً ، أَوْ أَرْبَعًا

وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا ، وَصُومِي ، فَإِنَّ ذَلِكَ يُجْزِئُكِ ، وَكَذَلِكَ افْعَلِي كُلَّ شَهْرٍ كَمَا

تَحِيضُ النِّسَاءُ ، وَكَمَا يَطْهُرْنَ مِيقَاتَ حَيْضِهِنَّ وَطُهْرِهِنَّ ، فَإِنْ قَوِيتِ عَلَى أَنْ

تُؤَخِّرِي الظُّهْرَ ، وَتُعَجِّلِي الْعَصْرَ ، فَتَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلاتَيْنِ الظُّهْرِ

وَالْعَصْرِ ، وَتُؤَخِّرِينَ الْمَغْرِبَ ، وَتُعَجِّلِينَ الْعِشَاءَ ، ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ

الصَّلاتَيْنِ فَافْعَلِي ، وَتَغْتَسِلِينَ مَعَ الْفَجْرِ ، فَافْعَلِي ، وَصُومِي إِنْ قَدَرْتِ عَلَى ذَلِكَ

” ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” وَهَذَا أَعْجَبُ الأَمْرَيْنِ إِلَيَّ ” ،

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) – அதிகமான கடினமான உதிரப்போக்கு உள்ளவளாக இருந்தேன். நபி (ஸல்) விடம் இதைப்பற்றி கேட்க என்னுடைய சகோதரி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் வீட்டிலிருக்கும்போது சென்று கேட்டேன். நபி (ஸல்) – பஞ்சை வைத்து துடைத்து கொள்ளுங்கள் என்றார்கள் அப்போது நான் அதை விடவும் அதிகமாக இருக்கிறது என்றேன் அப்போது அதை கட்டிக்கொள்ளுங்கள் என்றார்கள். என்றாலும் கொட்டிக்கொண்டிருக்கிறது என்று நான் கூறியபோது நபி (ஸல்) நான் இரண்டிலொன்றை உங்களுக்கு கூறுகிறேன் அதில் ஏதேனுமொன்றை நீங்கள் செய்தால் போதுமானது. உங்களுக்கு எது முடியுமோ அதை செய்துக்கொள்ளுங்கள். இது ஷைத்தானுடைய வேலையாகும்.நீங்கள் அல்லாஹ்வின் அறிவிலே 6 அல்லது 7 நாட்கள் மாதவிடாய் என்று நினைத்துக்கொண்டு பிறகு குளித்துவிட்டு சுத்தமாகிவிட்டதாக நினைத்து ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து விட்டு தொழுங்கள். ஆனால் லுஹரை பிற்படுத்தி அஸரை அதன் ஆரம்ப நேரத்தில் சேர்த்து அவையிரன்டிற்கும் ஒரு குளிப்பு, மஃரிபை பிற்படுத்தி இஷாவை ஆரம்ப நேரத்தில் சேர்த்து அவையிரண்டிற்கும் சேர்த்து ஒரு குளிப்பு மேலும் சுபுஹின் நேரத்தில் குளித்து தொழுங்கள்.  இது தான் எனக்கு விருப்பத்திற்குரியது.(அஹ்மத், அபூதாவூத், திர்மிதி – ஹஸன் ஸஹீஹ், கத்தாபி (ரஹ்) – மாதவிடாயின் ஆரம்பத்திலுள்ள பெண்ணுக்கும், தன்னுடைய மாதவிடாயின் காலத்தை அறிந்து கொள்ள முடியாத பெண்ணுக்குமுள்ள சட்டமாகும்.)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply