Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 3

நஜீசின் வகைகள் பாகம் 3

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 3

நஜீஸின் வகைகள்:

  1. செத்த பிராணிகள்
  2. இரத்தம்
  3. பன்றி இறைச்சி
  4. மனிதனுடைய வாந்தி
  5. மனிதனுடைய சிறுநீர்
  6. மனிதனுடைய மலம்

மேற்கூறப்பட்ட  மூன்றும் நஜீஸ் என்பதில் எந்தக்கருத்து  வேறுபாடும் இல்லை. ஆனால் வாந்தி குறைந்த அளவில் இருந்தால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகமாகி விட்டால் கழுவிட வேண்டும்.

           7.  சிறுபிள்ளைகள் சிறுநீர்

தாய்ப்பாலை மட்டுமே குடிக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிட்டால் போதுமானது பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும்
உம்முகைஸ் (ரலி)  உணவு உண்ணாத தாய்ப்பால் மட்டுமே குடிக்கக்கூடிய ஆண்குழந்தையை கொண்டு வந்தார்கள் அந்தக் குழந்தை நபி (ஸல்) வின் மடியில் சிறுநீர் கழித்த போது நபி (ஸல்) தன் ஆடையில் தண்ணீர் மட்டும் தெளித்து விட்டார்கள் அதை கழுவவில்லை.

அலி (ரலி) – நபி (ஸல்) – தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளில் ஆண்குழந்தையின் சிறுநீர் பட்டால் தண்ணீர் தெளித்தால் போதுமானது பெண்குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவ வேண்டும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply