Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / முதலாவது பாடம் மற்றும் இலக்கணம்

முதலாவது பாடம் மற்றும் இலக்கணம்

முதலாவது பாடம்

Full Lesson:

பாடம்:

هَذَا بَيْتٌ       இது வீடு

هَذَا مَسْجِدٌ –    இது பள்ளி

இதன் உதவியோடு புத்தகத்தில் உள்ள பாடத்தை தொடரவும்.

الْكَلِمَاةُ الْجَدِيْدُ :

பள்ளி مَسْجِدٌ;வீடு –  بَيْتٌ;பேனா     قَلَمٌ;  புத்தகம் كِتَابٌ

சாவி     مِفْتَاحٌ     ;     மேஜை مَكْتَبٌ  ;      கதவு  – باَبٌ; கட்டில்   سَرِيْرٌ   

நாற்காலி كُرْسِيٌّ;சட்டை قَمِيْصٌ ;   நட்சத்திரம் نَجْمٌ; மருத்துவர் طَبِيْبٌ

சிறுவன் وَلَدٌ ;   மாணவன் طَالِبٌ ; வியாபாரிتاَجِرٌ  ; மனிதன் رَجُلٌ

நாய் كَلْبٌ   ;     பூனை قِطٌّ   ; கழுதை حِمَارٌ ; குதிரை حِصَانٌ

ஒட்டகம் جَمَلٌ; சேவல் دِيْكٌ ; ஆசிரியர் مُدَرِّسٌ; கைக்குட்டை مِنْدِيْلٌ

ஆம் نَعَمْ ; இல்லை لَا ; என்ன مَا  ; யார் مَنْ

 

ஹாதா:

 

 

هذاஇது

ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும்.

இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும்.

அருகில் உள்ள பொருட்களை நாம் இது என்போம். ஆதலால் இதை அருகில் உள்ளதை குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல்

 اِسْمُ الاِشَارَةُ لِلْقَرِيْبِ என்று கூறவேண்டும்.

 

مَا  மற்றும் مَنْ :

مَا – என்ன ?

مَا هَذَا    – இது என்ன? هَذَا بَيْتٌ –  இது வீடு

مَا விற்கு பல அர்த்தங்கள் இருப்பினும் அது கேள்வியாக வரும்போது “என்ன?” என்ற அர்த்தத்தில் வரும். அதுவே

من – யார்?

இவர்  யார்? –من هذا؟ 

மனிதர்கள், ஜின்கள், மலக்குகள் இவர்களை  குறிக்கும் போது مَنْ எனும் வார்த்தை உபயோகிக்கப்படும்

 

نَعَمْ , لَا மற்றும் أَ :

 أَ :

இது வீடு + ஆ = இது வீடா?    

     أَ هَذَا بَيْتٌ  =     هَذَا بَيْتٌ

இது வீடு என்ற வாக்கியத்திற்கு பின்னால் “ஆ” சேர்த்து வீடா? என்று கூறும்போது அது கேள்வியாக மாறுவது போல,

 هَذَا بَيْتٌ என்ற வாக்கியத்திற்கு முன்னால்أ சேர்த்த உடன் அது கேள்வியாக மாறுகிறது.

نَعَمْ , لَا :

ஆம் இது வீடு தான் –  نَعَمْ ,هَذَا بَيْتٌ

نَعَمْ , لَا  –  حَرْفُ الْجَوَابِ

கேள்வி கேட்கப்படும் போது பதிலளிக்க ஆம்“,இல்லை என்ற சொல் உபயோகிக்கப்படுவதால் இதற்கு பதிலின்

இடைச்சொல் என்று பெயர்.

 

 

 

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply