Home / கட்டுரை / கட்டுரைகள் / ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை
ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தவறான தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில்.
தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்து விடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள்.
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ
الرَّجِيمِ
யாவற்றையும் செவியேற்கின்ற, யாவற்றையும அறிந்த அல்லாஹ்விடம் எறியப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.
ஆதாரம்:
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ
بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய
உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்“. (அல்குர்ஆன் 7: 200).
(அல்குர்ஆன் 41:36) லும் இதே கருத்தை தரும் வசனம் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்அல்குர்ஆனின் மூலம் தனது தூதருக்கு இட்ட கட்டளை:
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ
رَبِّ أَنْ يَحْضُرُونِ
என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து
நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்) இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!” (அல்குர்ஆன் 23: 97,98).
அதே போன்று பாதுகாப்பை பெற்றுத் தரும் இரு அத்தியாயங்கள் அல்பஃலக், அந்நாஸ ஆகிய
அத்தியாயங்களை ஓதிக்கொள்ளுங்கள்.
بسم الله الرحمن الرحيم
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ
شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ
شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில்
நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
بسم الله الرحمن الرحيم
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِوَالنَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில்
நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்;
(அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

 

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 01

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

Leave a Reply