Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 11

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 11

ஹதீத் பாகம்-11

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

  ⬇ باب من بلغ ستين سنة فقد أعذر الله إليه في العمر 

எவர் ஒருவர் 60 வயதை அடைந்தாரோ அவருக்கு அல்லாஹ் காலத்தில் முழுமையான நியாயங்களையும் அவகாசங்களையும் கொடுத்துவிட்டான்

சூரா ஃபாதிர் 35:37  

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ

نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

➥   இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).   

⬇ ↔ وجاءكم النذير يعني الشيب

இந்த வார்த்தைக்கு இமாம் புஹாரி அவர்கள் இது எச்சரிப்பவர்(வயது) என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தைக்கு எச்சரிக்கும் தூதர் என்றும் சிலர் விளக்கம் தந்துள்ளார்கள்.

⬇↔ أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغه ستين سنة تابعه أبو حازم وابن عجلان عن المقبري

அல்லாஹ் எவர் ஒருவருக்கு 60 வயது வரை ஆயுளை வழங்கி விட்டானோ அவர்களுக்கு அல்லாஹ்விடம் தப்புவதற்கான எந்தக் காரணமும் இருக்காது.

⬇↔ لا يزال قلب الكبير شاباً في اثنتين: في حب الدنيا وطول الأمل

முதியோர்களின் உள்ளம் இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருக்கிறது.

  • உலக மோகம்
  • நீண்ட ஆசை

 

⬇↔ يكبر ابن آدم ويكبر معه اثنان: حب المال وطول العمر

ஆதமின் மகன் முதுமையடையும்போது அவனுடைய இரண்டு ஆசைகளும் வளர்ந்துகொண்டே வருகின்றன.

  • பொருளாதாரத்தின் மீதான ஆசை
  • நீண்ட ஆயுள்

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply