Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 10

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 10

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 10

மத்தனில்  இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸுகள் இடம் பெற்றிருக்கின்றனவா என்று கவனிக்கப்பட வேண்டும்.

இரண்டு வகைகளில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) இருக்கிறது.

💕 ஸனத் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع)

💕 மதன் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع)

ஸனத் ரீதியாக ஒரு ஹதீஸை  (موضوع) இட்டுக்கட்டப்பது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-

💠 அவற்றை அறிவித்தவர் பொய்யர் என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட விஷயமாக இருக்கும்.

💠 அறிவிப்பாளரே தான் பொய் சொன்னதாக குறிப்பிட்டிருப்பார்.

உதாரணம்:

நூஹ் இப்னு அபீ மரியம் என்பவர் மக்கள் குர்ஆனை விட்டும் தூரமாகியிருப்பதால் அவர்களை குர்ஆனின்பால் நெருங்க வைப்பதற்காக நானே பல ஹதீஸுகளை இட்டுக்கட்டியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

💠 சிலர் யாரிடமிருந்து ஹதீஸுகளை அறிவிப்பதாக கூறுகிறாரே அவர் வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்திருக்க மாட்டார். அல்லது அவர் வாழ்ந்த ஊருக்கு இவர் சென்றிருக்கவே மாட்டார்.

உதாரணம்:

மைமூன் இப்னு அஹ்மத் என்பவர் தாம் ஹிஷாம் இப்னு அம்மார் அவர்களை சந்தித்ததாக கூறுகிறார். அப்போது இப்னு ஹிப்பான்( ரஹ்) அவரிடம் ஹிஷாம் இப்னு அம்மார் ஷாமில் இருக்கிறார் நீங்கள் ஷாமிற்கு செல்லவில்லையே என்று கேட்டபோது “நான் ஹிஜ்ரி 250 இல் சென்றேன் என்று அவர் பதில் கூறியதும் ஹிஷாம் இப்னு அம்மார் அதற்கு முன்னதாகவே இறந்து விட்டாரே என்று கேட்டார்கள்.

ஆகவே மைமூன் இப்னு அஹ்மத் இட்டுக்கட்டி பொய் கூறுகிறார் என்பதை இப்னு ஹிப்பான் (ரஹ் ) அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு இஸ்ஹாக் அல் கிர்மானி என்பவர் நான் முஹம்மத் இப்னு அபீ யாகூத் என்பவரிடம் ஹதீஸ் கலையை படித்தேன் என்றார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னதாகவே இவர் இறந்து விட்டதாக அஸ்மாஹு ரிஜாலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது போன்று தான் காணாத நபர்களிடமும் கேட்காத நபர்களிடமும்  ஹதீஸுகளை கேட்டதாக தகவல் தருவதாலேயே ஹதீஸ் கலை உலமாக்கள் தபக்காத்து ரிஜால் (طبقات الرجال) -ஐ குறித்து  நூல்களை எழுதியுள்ளனர்.

உதாரணம்:-

இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் தத்ரீபு ராவி

(تدريب الراوي) போன்ற நூற்களில் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பிறந்த காலம், அவர்கள் பிரயாணம் செய்த ஊர்கள், மரணித்த காலங்கள், அவரைப்பற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் கூறிய கருத்துக்கள் (மறதியாளரா? பொய்யரா…?) போன்றவை குறித்த அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இமாம் சுஃபியான் அஸ் சவ்ரீ (ரஹ் )- எப்பொழுது சில அறிவிப்பாளர்களிடம் நாங்கள் பொய்களை கண்டோமோ அப்பொழுதே தபக்காத்து ரிஜால்  (طبقات الرجال) ஐ உருவாக்கிவிட்டோம்.

💠 தன்னுடைய சுயநலத்திற்காக இட்டுக்கட்டியிருப்பார்.

உதாரணம் :

ஹலீம்(கோதுமையும் கறியும் சேர்த்து செய்யும் அரபு உணவு) வியாபாரி ஒருவர் ஹலீமை உண்டால் முதுகு தண்டிற்கு நல்லது என நபி (ஸல்) கூறியிருக்கிறார் என இட்டுக்கட்டுவது.

  1. ஸனத்தை பற்றிய அறிவு என்பது அறிவிப்பாளர் தொடரை பற்றிய அறிவு
  2. தபக்காத்து ரிஜால் (طبقات الرجال) என்பது ஒவ்வொரு அறிவிப்பாளரின் தனிப்பட்ட செய்திகளை குறிக்கும் ஆய்வுகள் ஆகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply