Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 12

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 12

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 12

இட்டுக்கட்டப்பட்ட  (موضوع) ஆன ஹதீஸ்களை உருவாக்கியதன் காரணங்கள் :-

1. இஸ்லாத்திற்கு அவப்பெயர் உருவாக்குவது.

2. தன்னுடைய மத்ஹபை(போக்கை, செயலை, கொள்கையை, புரிதலை) உறுதிப்படுத்துவதற்கு.

உதாரணம்:-

 إذا رأيتم معاوية على منبري فاقتلوه

🍃 முஆவியா(ரலி)யை இந்த மிம்பரில் பார்த்தால் அவரைக் கொன்று விடுங்கள்.(ஷியாக்கள் உருவாக்கிய ஹதீஸ்)

 من رفع يديه في الصلاة فلا صلاة له

🍃 யாரொருவர் தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துகிறாரோ அவருக்கு தொழுகையில்லை (ஹனஃபீ மத்ஹபினர் உருவாக்கியது)

3. தங்களுடைய ஊரை உயர்த்திக் கூறுவதற்காக

உதாரணம்:-

பாக்தாதை புகழ்ந்தும் இஸ்தான்பூலை தாழ்த்தியும் கூறப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உள்ளன.

4. இனம் மற்றும் மொழியை உயர்ந்ததென்று கூறுவதற்கு இட்டுக்கட்டப்பட்டவை

உதாரணம்:-

அல்லாஹ் கோபத்திலிருந்தால் அரபியிலும்; மகிழ்ச்சியாக இருந்தால் பார்ஸீ மொழியிலும் வஹீ அனுப்புவான்.

5. உலக காரணங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டவை

உதாரணம் :-

அரசர்களை புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்குதல்

6. மக்களிடம் ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக புதிய செய்திகளை கூறுவது.

இமாம் சுயூத்தி (ரஹ்) تحذير الخواص من أكاذيب القصاص என்ற புத்தகத்தில் (பேச்சாளர்கள் ஹதீஸின் பெயரால் கூறிய கதைகளையெல்லாம்  தொகுத்திருக்கிறார்.)

7. ஆர்வமூட்டுவதற்காக இட்டுக்கட்டுவது

இறுதியான இரு வகைகளும் ஆபத்தானவையாகும் என ஹதீஸ் கலை வல்லுனர்கள் அறிவிக்கின்றனர்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply