Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 9

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 9

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 9

مختلف الحديث ومشكل الحديث

முரண்பட்ட செய்திகள்

🍃 நபி (ஸல்) ஒரு குப்பைமேட்டின் பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார்கள்(திர்மிதி)

🍃 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்ததாக எவரேனும் உங்களுக்கு அறிவித்தால் அதை நீங்கள் நம்பவேண்டாம் (திர்மிதி)

🍃 இதனை ஆய்வு செய்த உலமாக்கள் நபி (ஸல் )வீட்டில் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை மேலும் அது குப்பைமேடாக இருப்பதின் காரணமாக தன் ஆடையில் பட்டுவிடும் என்ற காரணத்தினால் நின்று கழித்தார்கள். ஆகவே ஒருவர் நிர்பந்தத்தின் அடிப்படையில் நின்று சிறுநீர் கழிக்கலாம் என விளக்கமளித்துள்ளனர்.

سبب الورود

நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள்

🍃 குர்ஆனில் ஒரு வசனம் இறக்கப்பட்ட காரணத்தை سبب النزول என்பது போல சில காரணத்திற்காக நபி (ஸல்) அறிவித்த செய்திகளே  سبب الورود எனப்படும்.

உதாரணம்:-

أبوهريرة يقول سأل رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنا نركب

البحر ونحمل معنا القليل من الماء فإن توضأنا به عطشنا أفنتوضأ بماء البحر

فقال رسول الله صلى الله عليه وسلم هو الطهور ماؤه الحل ميتته

🍃 அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீரைப்பற்றி கேட்டபோது அன்னார் கூறினார்கள் “கடல் நீர் தூய்மையானது அதில் மரித்தவைகளும் ஹலாலானவைகளாகும்”என பதிலளித்தார்கள். (திர்மிதி)

காரணம்:-

🍃 கடலில் அதிகமாக பயணிக்கக்கூடிய ஒரு ஸஹாபி கடல் நீரில் உளூ செய்யலாமா என்று கேட்டபோது நபி (ஸல்) இதை அறிவித்தார்கள்.

 إذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ إذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلا

يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ

அபூகத்தாதா (ரலி) – நபி (ஸல் )- நீங்கள் மஸ்ஜிதில் நுழைந்தால் இரு ரக்காத் தொழாமல் அமர வேண்டாம் (புஹாரி, முஸ்லீம்)

காரணம்:-

அபூ கத்தாதா (ரலி) பள்ளிக்குள் நுழைந்தபோது அனைவரும் அங்கு அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல் )ஏன் அமர்ந்துவிட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது நீங்கள் அனைவரும் அமர்வதைக் கண்ட நானும் அமர்ந்து விட்டேன் என்று கூறியபோது தான் நபி (ஸல்) இந்த செய்தியை அறிவித்தார்கள்.

🍃 ஆகவே மேற்கூறப்பட்ட மூன்று  விஷயங்களையும்(ناسخ ومنسوخ ,مختلف الحديث ومشكل الحديث, سبب الورود ) மதன்( المتن இல் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply