Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் சுன்னத்துகள் – 2

தொழுகையின் சுன்னத்துகள் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

தொழுகையின் சுன்னத்துகள் 

ஆமீன் சொல்வது

●சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும்.
●அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)
● அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு தாவூத், சுனன் இப்னு மாஜா)
● நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதவர்கள் ஆமீன் சொல்லும் சத்தத்தில் பள்ளி அதிர்ந்துவிடும்(முஸ்னத் அபி ஹாகிம், இப்னு மாஜா)
●நபி(ஸல்) அவர்கள் ஆமீனை நீளமாக சொன்னார்கள்(முஸ்னத் அஹ்மத் சுனன் அபு தாவூத்)
● நபி(ஸல்) அவர்கள் ஆமீன் சொல்லும் சப்தத்தை நீளமாகவும் சப்தத்தை உயர்த்தியும் சொன்னார்கள்(அபு தாவூத், திர்மிதி)
● ஆமீன் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தியும், நீளமாகவும் சொல்வது; அதிகமான அறிஞர்களின் மூலம் அறியப்பட்டதாக இமாம் திர்மிதி பதிவுசெய்ததால் அது முக்கியமான சுன்னத் என்று நாம் புரிந்துக் கொள்வோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply