Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் சுன்னத்துகள் – 3

தொழுகையின் சுன்னத்துகள் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொழுகையின் சுன்னத்துகள் 

ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது

கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை
●ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது.

وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح

الحديث فهو مذهبي

இமாம் அபூஹனீபா, ஷாபி இருவரும் – உங்களுக்கு ஒரு ஹதீஸ் சஹீஹ் என்று தெரிந்து விட்டால் அது தான் என்னுடைய மத்ஹப் என்று கூறியுள்ளார்கள்.

  • நான் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்ட ஒன்றை சொன்னால் என்னுடைய வார்த்தையை விட்டு விடுங்கள்.
  • நான் எங்கிருந்து இந்த சட்டத்தை கொண்டு வந்தேன் என்று தெரியாத வரை என் சட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
  • இமாம் மாலிக் – நான் ஒரு மனிதன் நான் சரியாகவும் சொல்லலாம் தவறாகவும் சொல்லலாம். என்னுடைய தீர்ப்பில் எது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஒத்துப்போகிறதோ அந்த முடிவை எடுங்கள். என்னுடைய முடிவு குர்ஆனுக்கும் ஹதீஸு க்கும் மாற்றமாக இருந்தால் அதை விட்டு விடுங்கள். என்னுடைய வார்த்தை உயர்ந்ததல்ல அல்லாஹ்வுடைய வார்த்தை தான் உயர்ந்தது.

” لَيْسَ أَحَدٌ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا يُؤْخَذُ مِنْ قَوْلِهِ وَيُتْرَكُ ، إِلَّا النَّبِيَّ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  

  • நபி(ஸல்) அவர்களின் பேச்சை மட்டும் தான் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது கட்டாயம். மனிதர்களில் வேறு யாரின் கருத்தாக இருந்தாலும் அதை நாம் எடுக்கவும் செய்யலாம் விடவும் செய்யலாம்.
  • ஷாபி(ரஹ்) – நபி (ஸல்) வின் கருத்துக்கு எதிராக உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

سَمِعْتُ الشَّافِعِيَّ ، يَقُولُ : ” إِذَا وَجَدْتُمْ فِي كِتَابِي خِلافَ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولُوا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ

عَلَيْهِ وَسَلَّمَ وَدَعُوا مَا قُلْتُ “

  • َஷாபி (ரஹ்)என்னுடைய புத்தகத்தில் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாக தவறை கண்டால் நீங்கள் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்னுடைய கருத்தையோ வேறு யாருடைய கருத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது.

(إذا رأيتموني أقول قولا وقد صح عن النبي صلى الله عليه وسلم خلافه فاعلموا أن عقلي قد ذهب).

(ابن عساكر بسند صحيح)

  • நபி(ஸல்) வார்த்தைக்கு மாற்றமாக என் வார்த்தையை கண்டால் என் மூளை குழம்பி விட்டது என்று விளங்கிக்கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்களின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • ஷாபி(ரஹ்)-  என் தீர்ப்பு சஹீஹ் ஆன ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் நான் உயிருடன் இருந்தாலும் மரணித்து விட்டாலும் என் தீர்ப்பிலிருந்து நான் பின்வாங்கி விட்டேன்.
  • நபி(ஸல்)மூலம் வந்திருக்கக் கூடிய அனைத்து செய்திகளும் என்னுடைய ஃபத்வா தான் அதை நீங்கள் என் மூலம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சரியே.
  • அஹ்மத்(ரஹ்)-என்னையும் மாலிக்கையும், ஷாபி , அவ்ஜயி , சவ்ரீ(ரஹ்) அவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அதை பின்பற்றுங்கள்.
  • ஆகவே நபி (ஸல் ) அவர்கள் ஆமீன் சொன்ன முறைப்படி ஆமீன் சொல்ல முயற்சிப்போம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply