Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah Whatsapp Class ׃Thafseer class 11 Fathiha part 11

Al Islah Whatsapp Class ׃Thafseer class 11 Fathiha part 11

தஃப்ஸீர் பாடம் 11
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)
♥️சூரா முஃமின்↔️40:16
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது
; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.
♥️சூரா ஃபஜ்ரி↔️89:22
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
♥️சூரா தாஹா↔️20:108
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லா சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
ஆசிரியரின் கருத்து
1. மறுமை நாளின் உண்மையான ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே
2.
மறுமை என்பது நிச்சயமாக உள்ளது
3.
இவ்வசனம் மனிதர்களை அமல் செய்யத்தூண்டுகிறது
♥️வசனம்-5
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾
اِيَّاكَ
نَعْبُدُ
وَ
اِيَّاكَ
نَسْتَعِيْن
உன்னை மட்டுமே
நாங்கள் வணங்குகிறோம்
மேலும்
உன்னிடம் மட்டுமே
நாங்கள் உதவி தேடுகிறோம்
இதில் 2 வணக்கம் உண்டு
1-
نعبد عبد அடிபணிவது

🔹அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க பணிந்து அடிபணிய வேண்டும்
🔹அல்லாஹ் விரும்பி அங்கீகரிக்கின்ற வெளிப்படையான உள்ளார்ந்த அணைத்து செயல்களும் இபாதத் ஆகும்
🔹உதைமீன் (ரஹ்)- அல்லாஹ் ஏவிய அனைத்தையும் செய்வதையும் அவன் தடுத்த அனைத்தையும் விடுவதும் செய்வது தான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply