(பாகம் 9)
என்னுடைய கோபத்தை அன்பு மிஞ்சிவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கற்றுத்தந்தார்கள்
🔹ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தேடியலைகிறாள் – கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறாள் – அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் இடுவாளா?- இந்தப் பெண்ணை விடவும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக அன்புடையவனாக இருக்கிறான்.
🔹அல்லாஹ்வுடைய அன்பை 100 ஆக பிரித்து அதில் 99% தன்னிடம் வைத்துக்கொண்டான் 1% மட்டும் தான் பூமியில் அனுப்பினான். பூமியில் நாம் காணும் அன்பு அந்த 1% இன் விளைவு தான்.
🔹ஒரு பாலைவனத்தில் ஒட்டகத்தை தொலைத்தவன் ஒட்டகம் கிடைத்ததும் அடையும் சந்தோஷத்தை விட ஒரு மனிதன் பாவ மன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் சந்தோஷம் அடைகிறான்.
♥️ சூரத்தஜ் ஜூமர் 39:️53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக (39:53)
🔹அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை வந்தால் அவன் மீது உண்மையான அன்பு வெளிப்படும்.
♥️ சூரத்துத் தவ்பா 9: ️24 (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.