Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2

அகீதா

மின்ஹாஜூல் முஸ்லிம்

பாகம் – 2

   படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது.
சூரத்துல் முஃமினூன்( 23:86,87) :ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) அல்லாஹ்வேஎன்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87)   உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சூரத்துஜ் ஜூமர் (39:38) : வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்:அல்லாஹ் தான்!என்று அவர்கள்
நிச்சயமாகக் கூறுவார்கள்
; (நபியே!) நீர் சொல்வீராக:அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக:அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

சூரத்துஜ் ஜூக்ருஃப் (43:9) : (நபியே!) நீர் அவர்களிடம்:வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.

சூரத்துல் அன்கபூத் (29:61) :மேலும், (நபியே!)நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்தியிருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையைவிட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்(29:61)  மக்கா முஷ்ரிக்குகள் நபி (ஸல்) க்கு எதிராக அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.

ஆதாரம் சூரா அன்ஃபால் (8:32)

 படைத்தவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் தான் அபூஜஹல்அபூலஹப் போன்ற மோசமானவர்கள். ஆதலால் இறைவன் தான் படைத்தான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளுதல் ஒரு முஸ்லிமுக்கு போதாது.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply