Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class 15 Fathiha part 13 a

Al Islah WhatsApp Class Thafseer class 15 Fathiha part 13 a

தஃப்ஸீர் பாடம் 15
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13a)
اهْدِنَا – هدى – هداية எங்களுக்கு நேர்வழி காட்டு
ஹிதாயத் இரண்டு வகைப்படும் ;

1) هداية الارشاد –  நேர்வழியை காட்டுவது
 (28:56 –  நீ விரும்பியவருக்கெல்லாம் நேர்வழி கொடுக்க உன்னால் முடியாது ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான்).

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க நபி (ஸல்) அவர்களால் முடியவில்லை.

நூஹ்(அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் ஹிதாயத் கொடுக்க அவர்களால் முடியவில்லை

இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க அவரால் முடியவில்லை.

2) هداية التوفيقநேர்வழியைக் கொடுப்பது

(42:52
நபியே நிச்சயமாக நீங்கள் நேரான வழி காட்டுவீர்கள் )
சூரா ஆலு இம்ரான் 3:8

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

🔘 நபி (ஸல்) அதிகமாக கேட்ட துஆ⤵

اللهم يا مقلب القلوب ثبت قلبي علي دينكـ

(உள்ளங்களை புறட்டுபவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் நிலைக்கச்செய்)
🔘 அனஸ் (ரலி) விடம் நபி (ஸல்) கூறினார்கள் – உள்ளங்கள் அல்லாஹ்வுடைய இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ளன அதை அவன் விரும்பிய படி புரட்டுவான்
🔘 ஒரு அடியான் சொர்கவாசிகளின் அமலையே செய்து கொண்டிருப்பான் அவனுக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு ஜான் தூரம் தான் இருக்கும் அப்போது நரகத்திற்கான ஒரு செயலை செய்து நரகம் சென்று விடுவான்;
இன்னொரு அடியான் நரகவாசியின் செயலையே செய்துகொண்டிருப்பான் அவனுக்கும் நரகத்திற்கும் ஒரு ஜான் தூரம் தான் இருக்கும் அப்போது சொர்க்கதிற்கான செயலை செய்து சொர்க்கம் சென்று விடுவான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply