Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 15

உசூலுல் ஹதீஸ் பாகம் 15

உசூலுல் ஹதீஸ்

பாகம்-15

🔷உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதற்கு பிறகு மிகப்பெரும் பிரச்சனைகள் பல உருவானது. உஸ்மான் (ரலி) வின் கொலைக்கு பின் அஹ்லுஸ்ஸுன்னாவினர் என்றும் பித்அத் வாதிகள் என்றும் 2 தரப்பினர் உருவானார்கள்.

🔷இப்னு சீரின் (ரஹ்) கூறினார்கள் – உஸ்மான் (ரலி) யின் மரணத்திற்கு முன் அறிவிப்பாளர்களைப் பற்றி பேசப்படவில்லை ஆனால் உஸ்மான் (ரலி) யின் கொலைக்கு பின்னால் ஹதீஸுக்கு  யாரிடமிருந்து பெற்றார்கள் என்று கேட்டு அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவை சேர்ந்தவர்களாக இருந்தால் ஹதீஸை ஏற்றுக்கொள்வோம்  பித்அத் வாதிகளை சேர்ந்தவராக இருந்தால் அந்த ஹதீஸை நிராகரிப்போம் (முஸ்லீம் இன் முன்னுரை)

🔷 புஷைர் இப்னு கஹ்ப் அவர்கள் இப்னு அபபாஸ் (ரலி) யிடம் வந்து நபி (ஸல்) கூறியதாக பல செய்திகள் அறிவித்தும் இப்னு அப்பாஸ் (ரலி)அதை கண்டுகொள்ளவில்லை பிறகு நபி (ஸல்) பொய் சொல்ல கூடாது என்று கூறியதால் நாங்கள் ஸஹாபாக்களின் ஹதீஸுகளை ஏற்றுக்கொண்டோம் ஆனால் மக்கள் இப்போது பொய் சொல்ல ஆரம்பித்ததால் அவர்களிடமிருந்து ஹதீஸுகளை கேட்பதை விட்டுவிட்டோம் என்றார்கள்.

🔷ஆகவே ஹதீஸ் கலை வரலாற்றில் உஸ்மான் (ரலி)யின் கொலையின் காலம் ஒரு முக்கிய மயில் கல்லாக கருதப்படுகிறது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply