ஃபிக்ஹ் பாகம் – 4
கடமையான குளிப்பு
الغسل – குளிப்பு
ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை
❀ மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்
❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க வேண்டும் அதே நேரம் இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிக்க வேண்டிய அவசியமில்லை
❀ ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்து இந்திரியத்தை காண்கிறார் ஆனால் தூக்கத்தில் உணர்ச்சி வந்ததை அறியவில்லையென்றாலும் குளிக்க வேண்டும். ஏனெனில் அவர் தூக்கத்தில் நடந்ததை அறியாமல் இருக்கிறார்.
❀ ஒரு மனிதர் தன்னுடைய ஆடையில் இந்திரியத்தை கண்டார் அவர் அது எப்போது வெளியானதை அறியவில்லையென்றால், எந்த தூக்கத்தில் அது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ அப்போது முதல் உள்ள தொழுகைகளை குளித்து விட்டு மீட்ட வேண்டும்.