ஃபிக்ஹ் பாகம் – 5
காலுறையின் மீது மஸஹ் செய்தல்
எந்த இடத்தில் மஸஹ் செய்ய வேண்டும்?
காலுடைய மேல் பகுதி
முகீரா (ரலி) – நபி(ஸல்) தன்னுடைய இரண்டு காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்வதை நான் பார்த்தேன் (அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ – ஹசன் என்று கூறுகிறார்கள்)
அலி(ரலி) – மார்க்க விஷயங்களை புத்தியை கொண்டு முடிவெடுக்கக்கூடிய விஷயங்களாக இருந்தால் காலுடைய மேல் பகுதியில் மஸஹ் செய்வதை விட கீழ் பகுதியில் மஸஹ் செய்வது தான் சிறந்ததாக இருந்திருக்கும்.
முஹ்தஸிலா என்ற வழிகெட்ட கொள்கையில் தான் மார்க்கத்தில் தமது புத்திக்கு சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள். அது தவறாகும்.