Audio mp3 (Download)
நாபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்.
சிறப்புரை: மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி – அழைப்பாளர், அல் ஜுபைல் தஃவா நிலையம்.
நாள்: 20-01-2017, வெள்ளிக்கிழமை ஜும்ஆ முதல் மஃரிப் வரை
இடம்: நாபியா ஜாமியா மஸ்ஜித், நாபியா, தம்மாம், சவுதி அரேபியா.
அன்பிற்குரிய மௌலவி அவர்களே,
மிக அருமையான உரையை வழங்கியிருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்ய பிரார்த்திக்கின்றேன். தங்களுடைய உரையில் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக சில விடயங்களை பேசியிருக்கிறீர்கள். அவை, உங்களைப்போல் மார்க்கம் படித்திடாத மக்கள் மத்தியில் பேசிடும்போது அவர்கள் என்ன செய்வார்கள் ? முதலில், உங்களுடைய ஆசிரியர் மௌலவி செய்யாது அலி பைஜி அவர்கள் ஆதரவளித்து பேசியிருக்கின்ற விடயங்களில் அவரோடு ஒரு உடன்பாட்டை எட்டிய பின் மக்கள் மத்தியில் பேசுங்கள். பைஜி அவர்கள், களத்தில் நாம் நிற்க வேண்டும் என கூறுகிறார். நீங்கள் கூடாது என்கிறீர்கள். அப்படியிருக்கும்போது உங்களில் யாரோ ஒருவர் அந்த மன்ஹஜை பின்பற்றவில்லை. ஒன்று நீங்கள் அல்லது அவர். எனவே குழம்பிப்போய் உள்ள மக்களிடம் சென்று இன்னும் குழப்புவதை விட உலமாக்கள் மத்தியில் ஒரு சுமூக தீர்வு எட்டப்பட்ட பின்னர் மக்களிடம் வரலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.