Home / Uncategorized / வித்ரில் ஓதும் துஆ

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ
وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ
إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ
وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا  

என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425
اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ அல்லாஹும்மஹதினீ ஃபீமன் ஹதைத்த.

பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களில் எனக்கும் நேர்வழி காட்டு!  


اَللَّهُمَّ
اهْدِنِي
فِيمَنْ هَدَيْتَ
இறைவா
எனக்கு நேர்வழி காட்டு!
நீ நேர்வழி காட்டியவர்களில்

وَعَافِنِي فِيمَنْ عَافَيْت  வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த. 

பொருள்: இறைவா! நீ ஆரோக்கியம் வழங்கியவர்களில் எனக்கும் ஆரோக்கியம் வழங்கு!


وَعَافِنِي
فِيمَنْ عَافَيْت
எனக்கு ஆரோக்கியம் வழங்கு!
நீ ஆரோக்கியம் வழங்கியவர்களில்

وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ வ தவல்லனீ ஃபீமன் தவலைத்த. 

பொருள்: இறைவா! உன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டவர்களில் என்னையும் எடுத்துக் கொள்வாயாக!

وَتَوَلَّنِي
فِيمَنْ تَوَلَّيْتَ
என்னையும் நீ எடுத்துக் கொள்வாயாக!
உன்னுடைய பொறுப்பில் எடுத்துக்
கொண்டவர்களில்

 
وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ வ பாரிக் லீ ஃபீ மா அஃதைத்த. 

பொருள்: எனக்குத் தருபவற்றில் எனக்கு நீ அருள் புரிவாயாக!

وَبَارِكْ لِي
فِيمَا أَعْطَيْتَ
நீ எனக்கு அருள் புரிவாயாக!
 தருபவற்றில்

وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ வ கினீ ஷற்ற  மா கழைத்த. 

பொருள்: நீ முடிவு செய்து விட்டதில் தீங்கை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!


وَقِنِي
شَرَّ مَا قَضَيْتَ
என்னைப் பாதுகாப்பாயாக!
நீ முடிவு செய்து விட்டதில் தீங்கை விட்டும்

إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ  ன்னக்க தக்ழீ வலா யுஃழா அழைக்க. 

பொருள்: நிச்சயமாக நீயே முடிவெடுப்பாய், உனக்கு எதிராக எவரும் முடிவு செய்ய முடியாது.

إِنَّكَ تَقْضِي     
وَلَا يُقْضَى عَلَيْكَ
நிச்சயமாக நீயே முடிவெடுப்பாய்
உனக்கு எதிராக எவரும் முடிவு செய்ய முடியாது.

وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ன்னஹூ லா யதில்லு  மன் வாலைத்த.. 

பொருள்: நீ கண்ணியப்படுத்தியவரை நிச்சயமாக யாரும் இழிவு படுத்த முடியாது

وَإِنَّهُ لَا يَذِلُّ
مَنْ وَالَيْتَ
நிச்சயமாக யாரும் இழிவு படுத்த முடியாது
நீ கண்ணியப்படுத்தியவரை

وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ வலா யயிச்சுஆதைத்த

 பொருள்: நீ இழிவு படுத்தியவனை நிச்சயமாக யாரும் கண்ணியப்படுத்த முடியாது


وَلَا يَعِزُّ
مَنْ عَادَيْتَ
நிச்சயமாக யாரும் கண்ணியப்படுத்த முடியாது
நீ இழிவு படுத்தியவனை
تَبَارَكْتَ رَبَّنَا பொருள்: எங்களைப் படைத்துப் பாதுகாப்பவனே! நீ அருள் மிக்கவனாய் இருக்கிறாய்

تَبَارَكْتَ
رَبَّنَا
நீ அருள் மிக்கவனாய் இருக்கிறாய்
எங்களைப் படைத்துப் பாதுகாப்பவனே!

Check Also

முஸாபகதுர் றமழான்

தினமும் நடைபெறும் இப்தார் சிந்தனை சிறப்பு உரைகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து மாத இறுதியில் கொடுக்கப்படும் வாட்ஸ்அப் இலக்கம் …

One comment

  1. PICHAI KANI ISMAIL

    MONTHLY PROGRAM PLS E MAIL

Leave a Reply