ஹதீஸ் பாகம்-76
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب من هم بحسنة أو بسيئة
நல்ல விஷயத்தை செய்ய ஆர்வமும் தீமை செய்ய ஆர்வமும்
أبو رجاء العطاردي عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه
وسلم فيما يروي عن ربه عز وجل قال قال إن الله كتب الحسنات والسيئات ثم بين
ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها
فعملها كتبها الله له عنده عشر حسنات إلى سبع مائة ضعف إلى أضعاف كثيرة
ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها
كتبها الله له سيئة واحدة
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) அல்லாஹ் கூறுவதாக அறிவித்தார்கள் (ஹதீத் குதுஸி)அல்லாஹ் நன்மைகளையும் பாவங்களையும் எழுதினான் பின்னர் அதை விளக்கினான் ஒருவர் நன்மையை செய்ய வேண்டும் என்று ஆர்வப்பட்டு அதை செய்யவில்லையென்றாலும் அந்த நன்மை முழுமையாக செய்ததாக அல்லாஹ் எழுதுகிறான் அவன் அந்த நன்மையை செய்தால் அல்லாஹ் அதற்கு 10-700 மடங்கு வரையோ அல்லது அதற்கு மேலும் கூலியை எழுதுகிறான். எவரேனும் ஒரு பாவத்தை செய்ய எண்ணி அதை செய்யாமல் விட்டு விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு கூலியை எழுதுகிறான் ஆனால் அவன் பாவத்தை செய்ய எண்ணி அதை செய்தால் ஒரே ஒரு பாவம் செய்ததாக அல்லாஹ் எழுதுவான்.