Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 16

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 16

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 16

السند والإسناد

🍃 ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர்.

உதாரணம் :-

இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை.

🍃  இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது.

🍃 சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அறிவிப்பாளர் தொடர்  السند

முஹம்மத் நபி (ஸல்)

⬇️

ஸஹாபாக்கள்

⬇️

தாபியீன்கள்

⬇️

தபஅ தாபியீன்கள்

⬇️

இமாம் புஹாரி அவர்களுடைய ஆசிரியரின் ஆசிரியர்

⬇️

இமாம் புஹாரி அவர்களின் ஆசிரியர்

⬇️

இமாம் புஹாரி

 

🍃 அறி்ஞர்கள் இவர்களை பல்வேறு விதமாக பிரிக்கிறார்கள். அதை தபகா الطبقات என்று கூறுவர்.

🍃 ஸஹாபாக்களில் பத்திற்கும் மேற்பட்ட தபகாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலமாக்கள் الإسناد ஐ பற்றி கூறியவை:-

وقال عبد الله بن المبارك رحمه الله: “الإسناد من الدين، ولولا

الإسناد لقال من شاء ما شاء”. رواه مسلم في مقدمة صحيحه

🍃 இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) :- இஸ்னாத் மார்க்கத்தில் உள்ளதாகும் . அது இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் தனக்கு தோன்றியதைக் கூறுவார்கள்.

 سَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ , يَقُولُ : ” الَإسْنَادُ سِلَاحُ الْمُؤْمِنِ , فَإِذَا لَمْ يَكُنْ مَعَهُ سِلَاحٌ

, فَبِأَيِّ شَيْءٍ يُقَاتِلُ ؟ “

🍃 இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) – சனது தான் ஒரு முஃமினின் ஆயுதம். சனத் இல்லையென்றால் எந்த ஆயுதத்தை வைத்து அவர் போர் புரிவார்.

 وقال الإمام الأوزاعي رحمه الله تعالى: (ما ذهاب العلم إلا ذهاب الإسناد

🍃 இமாம் அவ்சாயீ (ரஹ்) – இஸ்நாத் போகும் வரை தீன் மக்களிடமிருந்து போகாது.

🍃 ஆகவே இயன்றவரை ஹதீஸை சனதுடன் கூற  முயற்சிக்க வேண்டும்.

🍃 இமாம் ஷுஃபா(الامام شعبة بن الحجاج) (ரஹ்) – சனத் இல்லாமல் அறிவிக்கப்படும் ஹதீஸ் கடையில் விற்கப்படும் காய்கறியைப் போன்றது.

🍃 சமீபத்தில் வாழ்ந்த மொரோக்கோவை சேர்ந்த அறிஞர் அப்துல் ஹை அல் கத்தானி (عبد الحي الكتاني)  – சனத் இல்லையென்றால் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வேதங்களில் விளையாடியது போல் இஸ்லாத்தில் விளையாடப்பட்டிருக்கும்.

🍃 ஆரம்ப காலங்களில் ஸஹாபாக்கள் சனதை பற்றி கேட்டதில்லை. உஸ்மான் (ரலி) அவர்களது மரணத்திற்குப் பின்னரே அதைப்பற்றி கேட்க ஆரம்பித்தனர்.

🍃 தாபியீ  ஒருவர் கூறினார்கள் – நாங்கள் பஸராவில் இருந்தோம். எங்களிடம் நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக சில தகவல்கள் வரும், ஆனால் நாங்கள் அதை நம்பாமல் மதீனாவிற்கு சென்று அங்குள்ள சஹாபாக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அதை ஏற்றுக் கொள்வோம்.

🍃 இமாம் அபூதாவூத் அத் தயாலிஸீ (أبو داود الطيالسي) – நாங்கள் நான்கு பேரிடமிருந்து ஹதீஸை கற்றுக் கொள்வோம்

1. இமாம் ஸுஹ்ரீ (امام الزهري)

2. இமாம் கத்தாதா (امام قدادة)

3. இமாம் அபூ இஸ்ஹாக் (امام ابو اسحاق)

4. இமாம் அஹ்நஷ்

🍃சோதனை செய்யப்பட்ட ஹதீஸ்: 

و من هذا ما يرويه ابن عبد البر عن الشعبى عن الربيع ابن خشيم قال: ((من قال

لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيى و يميت، و هو على كل

شيئ قدير، عشر مرات كن. له كعتق رقاب أو رقبة : قال الشعبى فقلت للربيع بن

خشيم: من حدثك بهذا الحديث؟ فقال: عمرو بن ميمون الأودية فلقيت عمرو بن

ميمون، فقلت: من حدثك بهذا الحديث؟ فقال: عبد الرحمن بن أبى ليلى. فلقيت ابن

أبى ليلى فقلت: من حدثك؟ قال: أبو أيوب الأنصارى صاحب رسول صلى الله عليه

وسلم قال يحيى بن سعيد: ((و هذا أول ما فتش عن الإسناد))

🍃 இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலில் சனத் சோதிக்கப்பட்ட அறிவிப்பாளர் தொடர் :

இப்னு அப்துல் பர்(إبن عبد البر)

⬇️

சுஹ்பா(الشعبى)

⬇️

இப்னு ஹூசைம்(إبن خشيم)

⬇️

அம்ரு இப்னு மைமூன்(عمرو بن ميمون)

⬇️

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா

(عبد الرحمن بن ابى ليلى)

⬇️

அபூ அய்யூப் அன்சாரி(ابو أيوب الأنصارى )

⬇️

முஹம்மது (ஸல்) (محمد ﷺ)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply