Home / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி

ஆதாரபூர்வமற்ற செய்திகள்
01/06

தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி

ஹதீஸ்:

புழுதியை விட்டும் தூரமாக இருங்கள். அதன் மூலம் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும்

விமர்சனம்:

இது ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறுவதாக நாம் அறியவில்லை

இமாம் இப்னுல் அஸீர் தனது “அந்நிஹாயா” வில் இதை ஹதீஸென்று பதிந்துள்ளார். ஆனால், இது நபியவர்கள் கூறியதாக ஹதீஸ் கிரந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

என்றாலும் இமாம் இப்னு ஸஃத் “தபகாதுல் குப்ரா 8/2/198” இல் அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் அல்மிஸ்ரி சொன்னதாக பின்வரும் செய்தியை பதிந்துள்ளார்.

“நபியவர்களின் அடிமை இப்னு ஸன்தர் சில நபர்களுடன் அம்ருப்னுல் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) உடன் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்றவர்கள்
புழுதியைக் கிளப்பினார்கள். அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகயால் மூக்கை மூடிவிட்டு, : புழுதியைத் தவிர்ந்து கொள்ளுங்கள் அது மிக இலகுவாக (உடலில்) புகுந்து கொள்ளக்கூடியதும் வெளி வருவதற்கு மிகக் கஷ்டமானதுமாகும். அது நுரையீரலைச் சென்றடைந்தால் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும்

அப்துல்லாஹ் இதை ஹர்மலாவிடமிருந்தும் அவர் சிலர் இப்னு ஸன்தரிடமிருந்து தனக்கு அறிவித்ததாகவும் கூறுகின்றனர்.

இது ஸஹாபியுடைய கூற்றாக இருந்தாலும் மூன்று காரணங்களால் பலவீனமாகின்றது.

  • ஒன்று :இமாம் இப்னு ஸஃத் தனக்கு அப்துல்லாஹ்விடமிருந்து இந்த செய்தியை அறித்தவரை கூறவில்லை. எனவே இது முஅல்லக் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
  • இரண்டு :அப்துல்லாஹ் ஸஹீஹுல் புகாரியின் அறிவிப்பாளராக இருந்தாலும் அவரில் சிறு பலவீனம் இருக்கிறது.

இவர் பற்றி இமாம் இப்னு ஹிப்பான் இவ்வாறு கூறுகிறார் :

“மார்க்கப்பற்றுள்ளவராக இருந்தாலும், அவரது அண்டை வீட்டுக்காரரால் அவருடைய அறிவிப்புகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் சேர்ந்தன. ‘அவ்விருவரும் பகைத்துக் கொண்டிருந்தனர். அண்டை வீட்டுக்காரர் அப்துல்லாஹ்வின் ஆசிரியரின் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அப்துல்லாஹ்வின் கையெழுத்தைப் போன்று அவற்றை எழுதி வீட்டுக்குள் அவரது புத்தகங்களுக்கு மத்தியில் எறிந்து விடுவார். அப்துல்லாஹ்வும் தன்னுடைய எழுத்திலுள்ள அவற்றை தனது அறிவிப்புகள் என்று எண்ணி அவற்றை அறிவிக்கலானார். என்று இமாம் இப்னு ஹுஸைமா சொல்ல நான் கேட்டேன்.”

  • மூன்று :ஹர்மலாவுக்கு இப்னு ஸன்தரிடமிருந்து அறிவித்தவர் யாரென்று கூறப்படவில்லை.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

Check Also

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் …

Leave a Reply