Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 28

உசூலுல் ஹதீஸ் பாகம் 28

உசூலுல் ஹதீஸ்

பாகம்-28

ஹதீஸுகளைப்பற்றிய ஷியாக்களின் நிலைப்பாடு :

💠 ஷியாக்களின் முக்கிய அடிப்படையே நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் கலீஃபாவாகவேண்டிய ஒரே தகுதி அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே உள்ளது மேலும் நபி (ஸல்) அலீ (ரலி) அவர்களைத்தான் அடுத்த கலீஃபா வாக நியமித்தார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கு பின்னர் அலீ (ரலி) கலீஃபா ஆவதற்கு உடன்படாத ஸஹாபாக்கள் அனைவரும் பாவிகளாகவும், காஃபிர்கள்  என்றும் கூறுகின்றனர். ஆகவே ஷியாக்கள் பெரும்பாலான ஸஹாபாக்களை குற்றம் சாட்டுகின்றனர்.
💠 அந்த வகையில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), ஆயிஷா (ரலி), தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), முஆவியா (ரலி), அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி),இப்னு உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்களை பாவிகள் என்றும் காஃபிர்கள் என்றும் கூறுவார்கள்.
💠 நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள் நமக்கு ஸஹாபாக்கள் வழியாகவே கிடைக்கப்பெற்றது. இவர்கள் ஸஹாபாக்களை தரம் பிரித்து இன்னின்ன ஸஹாபாக்கள் நல்லவர்கள் இன்னின்ன ஸஹாபாக்கள் காஃபிர்கள் என தரம் பிரித்தார்கள். அவர்களுக்கு ஏற்கும் ஸஹாபாக்களின் ஹதீஸுகளை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்.
💠 இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தின் படி ஷியாக்கள் 15 ஸஹாபாக்களை தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். மற்ற அனைத்து ஸஹாபாக்களின் ஹதீஸுகளையும் நிராகரிக்கின்றனர்.
💠 நபி (ஸல்) அவர்கள் தனக்கு பிறகு யார் கலீஃபா வாக வர வேண்டும் என்பதை தெளிவாக கூறவில்லையென்றாலும் மறைமுகமாக மக்களுக்கு சொல்லி விட்டே சென்றார்கள்.
உதாரணம்
💠 நபி (ஸல்) மரணப்படுக்கையில் இருக்கும்போது அபூபக்கர் (ரலி) தான் மக்களுக்கு இமாமாக தொழுகை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
என்னுடைய பள்ளியில் இருக்கும் அனைத்து கதவுகளையும் மூடி விடுங்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் கதவைத்தவிர என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள்.
💠 உண்மை இவ்வாறிருக்க ஷியாக்கள் நபி (ஸல்) தனக்கு பின்னால் அலீ (ரலி) அவர்கள் தான் கலீஃபா வாக வரவேண்டும் என்று கூறியதாக வாதிடுகிறார்கள்.
💠 நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு நிறைவேற்றிவிட்டு மதீனாவிற்கு திரும்பும்போது கும் என்ற நீர்தேக்கத்திற்கு அருகில் அலீ தான் எனக்கு பின்னால் கலீஃபாவாக வர வேண்டும் என்று கூறியதாக ஒரு பொய்யான ஹதீஸை இட்டுக்கட்டினார்கள். மேலும் அந்த நாளை அவர்கள் மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடியும் வருகின்றனர்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply