Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 29

உசூலுல் ஹதீஸ் பாகம் 29

உசூலுல் ஹதீஸ்

பாகம்-29

 

ஷியாக்கள் ஹதீஸை எவ்வாறு தரம் பிரிக்கிறார்கள்?

💠 அவர்கள் ஹதீஸ்களை 4 வகையாக தரம் பிரிக்கிறார்கள்.

  • الحديث الصحيح அல் ஹதீஸ் ஸஹீஹ்
  • الحديث الحسنஅல் ஹதீஸ் ஹஸன்
  • الحديث الموثق அல் ஹதீஸ் முவத்தக்
  • الحديث الضعيف அல் ஹதீஸ் லயீஃப்

அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஸஹீஹிற்கு கீழ்கண்ட வரைவிலக்கணம் வைத்துள்ளனர்.

  • اتصال السندஅறிவிப்பாளர் வரிசை தொடராக இருக்க வேண்டும்
  • عدالة الراوي அறிவிப்பாளர் நம்பகத்தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
  • ضبط الراوى அறிவிப்பாளர் ஞாபக சக்தியுள்ளவராக இருக்க வேண்டும்.
  • ألا يكون الحديث شاذا பிற ஹதீஸுகளுடன் முரண்பட்டதாக இருக்க கூடாது
  • الا يكون معللا ஹதீஸில் மறைமுகமான வடு இல்லாமலிருக்க வேண்டும்.

(1) ஷியாக்களின் ஸஹீஹிற்கான வரைவிலக்கணம்

  • هو الذي يرويه العدل الامامي او العدلان فى جميع مراتب السند إلى ان ينتهى الى النبي أو الامام المعصوم நம்பகமான ஒன்று அல்லது இரண்டு ஷியா இமாம்கள் அறிவித்ததாக இருக்க வேண்டும். அந்த தொடர் நபி (ஸல்) வரை இருக்க வேண்டும். அல்லது அவர்கள் நம்பும் 12 இமாம்களில் ஒருவரிடமிருந்து வந்ததாக அந்த அறிவிப்பாளர் தொடர் இருக்க வேண்டும்.
  • அவர்களுடைய வரைவிலக்கணத்தில் اتصال السند (ஒவ்வொரு அறிவிப்பாளர்களும் தான் யாரிடமிருந்து அறிவிக்கின்றார்களோ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்) என்ற அடிப்படை இல்லை.
  • அறிவிப்பாளர் மனன சக்தி உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லை
  • அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஸஹீஹிற்காக வகுத்திருக்கும் எந்த கோட்பாடும் அவர்களுக்கு இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அறிவிப்பாளருக்கும் மற்ற அறிவிப்பாளருக்கும் இடையில் 100 – 300 வருடங்கள் வரை இடைவெளிகள் இருந்தாலும் அவர்கள் அதை ஸஹீஹ் என்றே ஏற்றுக்கொள்வர்

12 இமாம்கள்

  • அலி இப்னு அபீதாலிப் (ரலி)
  • ஹசன் (ரலி)
  • ஹுசைன் (ரலி)
  • அலி ஜைனுல் ஆபிதீன் இப்னுல் ஹுசைன்
  • முஹம்மத் இப்னு (அலி) ஜைனுல் ஆபிதீன்
  • ஜஹ்பர் இப்னு முஹம்மத் அல் பாக்கிர்
  • மூஸா இப்னு ஜஹ்பர் அஸ்ஸாதிக்
  • அலி இப்னு மூஸா அல் காதிம்
  • முஹம்மத் அல் ஜவ்வாத் இப்னு ‘அலி அர் ரிதா”
  • அலி அல் ஹாதி இப்னு முஹம்மத் அல் ஜவ்வாத்
  • அல் ஹசன் அல் அஸ்கரி இப்னு அலி அல் ஹாதி
  • முஹம்மத் அல் மஹதி இப்னு அல் ஹசன் அல் அஸ்கரி – இவர் ஹிஜ்ரி 329 இல் காணாமல் போய் விட்டார். இவர் கடைசி காலத்தில் தோன்றுவார் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.

(2) ஷியாக்களின் ஹஸன் ஹதீஸின் வரைவிலக்கணம்

💠 (الحسن) وهو الحديث الذي يرويه الامامي الممدوح مدحا يقربه من التعديل

அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஞாபக சக்தியில் கூடுதல் குறைகளை வைத்து ஹசன் என்று தரம் பிரிக்கையில் ஷியாக்கள் நம்பகத்தன்மையில் சிறிது குறை உள்ளவர்கள் அறிவிக்கும் ஹதீஸுகளை ஹஸன் என்ற தரத்தில் வைக்கின்றனர்.

(3) ஷியாக்களின் الحديث الموثق அல் ஹதீஸு முவத்தக்

💠 மார்க்கத்தில் நன்னடத்தையுள்ள ஒருவர் அவர் ஷியாவாக இல்லாதிருப்பினும் ஷியா கொள்கையில் முரண்பட்டிருப்பினும் அவர்களுடைய ஹதீஸ்களை அல் ஹதீஸ் முவத்தக் என்பர்.

(4) ஷியாக்களின் الحديث الضعيف அல் ஹதீஸ் லயீஃப்

💠 மேற்கூறப்பட்ட 3 வகையிலும் சேராத ஹதீஸ்களை அவர்கள் லயீஃப் என்ற தரத்தில் கொண்டுவருவர்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply