Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 9

 

ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕

சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – ஹஸன்)

💕 இப்னு ஒதைமீன் (ரஹ்) – உபகாரத்தை அடிப்படையில் தண்ணீர் தந்தாலும் அதை பெறக்கூடாது அதற்கு பதிலாக தயம்மும் செய்து கொள்ளலாம். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி உளூ செய்வதே மேலானதாகும்

💠 ஸூரத்துஜ்ஜுமர் 39:9

هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ

…அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?…..

💠 ஸூரத்துல் முஜாதலா 58:11

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ ‏

…உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் …

 مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ 💕

முஆவியா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக்கொடுக்கிறான் (புஹாரி, முஸ்லீம்)

💕 நாம் அதிகமதிகமாக கல்வியை தேடும்போதும், புத்தகங்களை வாசிக்கும்போதும், புத்தகம் வாசிப்பவர்களுடன் பழங்கும்போதும் தான்; நமக்கு முன் சென்ற அறிஞர் பெருமக்களின் மிகப்பெரும் பணிகளை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

💕 இமாம் ஷுஹ்பீ (ரஹ்) நீங்கள் எந்த ஒரு மார்க்கக்கல்வியை கேட்டாலும் எழுதுங்கள் எழுத வசதி இல்லையேல்  பக்கத்தில் உள்ள சுவற்றிலாவது எழுதுங்கள் என வலியுறுத்தினார்கள்.

💕 முன் சென்ற அறிஞர்கள் எழுதும் அடிக்குறிப்புகள் கூட பிறருக்கு புரியும் விதத்தில் இருந்தது.  அவர்களது அடிக்குறிப்புக்களால் முக்கிய குறிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு இரண்டையும் பிரித்து சீராக எழுதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply