Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 3

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

இந்த காலத்தின் நாம் உபயோகிக்கும் துணியால் செய்யப்பட (சாக்ஸ்) காலுறையில் மஸஹ் செய்யலாமா?

அபூதாவூத் (ரஹ்) – அலி (ரலி) , ஆபத்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி), பராவு இப்னு ஆசிப் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி) அபூஉமாமா (ரலி), சஹத் இப்னு ஸஅத் (ரலி), அம்ரு இப்னு ஹுரைப் (ரலி), உமர் இப்னு கத்தாப் (ரலி) மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றவர்களெல்லாம் சாக்ஸில் மஸஹ் செய்ததாக குறிப்பிடுகிறார்கள்.

இமாம் அஹ்மத் (ரஹ்) சாக்ஸ் – இல் மஸஹ் செய்யலாம் என குறிப்பிடுகிறார்கள்.

இமாம் சுபியான் அஸ்ஸவ்ரீ, இப்னுல் முபாரக், அதாஉ, ஹசன், சயீத் இப்னுல் முஸய்யிப் (ரஹ்) போன்ற இமாம்களும் சாக்ஸில் மஸஹ் செய்யலாம் என்று கருத்து கூறுகின்றனர்.இமாம் அபூஹனீபா அவர்களின் பிரபலமான மாணவர்களில் இருவரான அபூயூசுப், முஹம்மது – சாக்ஸ் கனமாக இருக்கவேண்டும் என்று கருத்து கூறுகிறார்கள்.

இமாம் அபூஹனீபா (ரஹ்) ஆரம்ப காலத்தில் சாக்ஸில் மஸஹ் செய்வது தவறு என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் தன் மரணத்திற்கு 3 அல்லது 7 நாட்களுக்கு முன்னால் சாக்ஸில் தடவுவது கூடும் என்று தெரியவந்ததும் பிறகு சாக்ஸில் மஸஹ் செய்வது கூடும் என்று ஃபத்வா தந்தார்கள்.

கால்களில் காயத்தினாலோ அல்லது அவசிய காரணத்திற்காகவோ துணி கட்டப்பட்டிருந்தால் அதன் மீதும் தடவலாம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply