Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 4

வசனம் 64

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ 

ஸுஜூத் –  سُجَّدًا

நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏  

  இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر

وركعتي الضحي، وأن أوتر قبل أن أنام

 

  அபூஹுரைரா (ரலி) – என்னுடைய தோழர் நபி (ஸல்) எனக்கு மாதத்தில் 13, 14, 15 ஆம் நாட்கள் நோன்பு வைக்குமாறும், லுஹா தொழுமாறும், தூங்கும் முன் வித்ர் தொழுமாறும் உபதேசம் செய்தார். அன்றிலிருந்து நான் இந்த 3ஐயும் விடவில்லை.

 அழைப்புப்பணியில் இருப்பவர் இரவுத்தொழுகை(தஹஜ்ஜுத்) தொழுவது சிறந்தது.

சூரா அல் முஜ்ஜம்மில் 73 : 2, 3, 4, 5

  (2) قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا 

  இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;

(3) نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا

  அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

(4) اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا

  அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

 (5) اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا

➥   நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.

(6) اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا

➥   நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

 இரவுத்தொழுகை அசதி அல்லது நோயின் காரணமாக விட்டுவிட்டால் பகலில் அதற்கு நிகராக தொழுவார்கள் (இரவில் 11 என்றால் பகலில் அதை 12 ஆக்கி தொழுவார்கள்)

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply