Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8

தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8

لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة

ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம்

  1. திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல்
  2. கொலைக்கு கொலை பரிகாரம்
  3. மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர்

இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் செய்யக்கூடாது.

விபச்சாரத்தை வேரோடு களையும் இஸ்லாம்

 தேவை ஏற்பட்டால் நீங்கள் இரண்டோ அல்லது மூன்றோ நான்கோ திருமணம் முடித்துக்கொள்ளுங்கள், பெண்ணுக்கும் கணவனை தேர்வு செய்யவும் பிரியவும் எல்லா உரிமைகளும் இஸ்லாம் கற்றுத்தருகிறது, ஆண்களும் பெண்களும் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், ஆண்களுக்கு முன்னாள் நறுமணம் பூசாதீர், அந்நிய ஆடவன் உடன் தனிமையில் இருக்க வேண்டாம், ஒரு பெண் ஆண் துணையில்லாமல் தனிமையில் பயணம் செல்ல வேண்டாம்,பெண்கள் நளினமாக அந்நிய ஆணிடம் பேச வேண்டாம்.

الإسلام يهدم ما قبله

ஒருவர் ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால்  அதற்கு முன்னால் அவர் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்.

عن أبن عمر رضي الله عنهما قال : كنا نعدَّ لرسول الله صلي الله عليه وسلم 

في المجلس الواحد مائة مرة ((رب اغفر لي وتُب عليَّ، إنك أنت   التواب

(((الغفور))، وفي لفظ : (الر حيم

  இப்னு உமர்(ரலி) – நாங்கள் நபி(ஸல்) உடன் ஒரு மஜ்லிஸில் அமர்ந்திருந்தோம் அவர்கள் ரப்பிக்பிர்லீ வதுப் அலய்ய இன்னக்க அந்தத் தவ்வாபுல் கஃபூர் அல்லது தவ்வாபு ரஹீம் என்று 100 முறை கூறினார்கள்.

❤ ஒரு தாய் குழந்தையை தொலைத்து அவளுடைய பிள்ளை அவளிடம் கிடைத்தபோது அவள் உடனே பால் கொடுத்தால் அந்த தாயை விட அல்லாஹ் நம் மீது கருணையுள்ளவன் என்று நபி(ஸல்) புரியவைத்தார்கள்.

சூரா அல் முஃமினூன் 23:118

وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏

➥   இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply