Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 67

مَثَلُ نُوْرِهٖ 

அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்

  ஒரு மாடம் போன்றதுكَمِشْكٰوةٍ

   அதில் ஒரு விளக்கிருக்கிறதுفِيْهَا مِصْبَاحٌ‌ ؕ

அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ 

அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ

பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் எண்ணெயை கொண்டு அது மூட்டப்படுகிறது يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ

 அந்த விளக்கு கிழக்கிலுமில்லை மேற்கிலுமில்லைلَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ

அந்த எண்ணெய் நெருப்பு மூட்டாமலேயே பிரகாசிக்கக்கூடியது يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌

⭕அல்லாஹ் முஃமினுடைய உள்ளத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுவதன் மூலம் அது மென்மையானது என்று கூறுகிறான்.

சூரா அல்ஃபத்ஹ் 48:29

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்.

சூரா அல் அன்பியா 21:107

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.

சூரா அத்தவ்பா 9 : 128

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ

رَءُوْفٌ رَّحِيْمٌ‏

இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் இரக்கமும் உடையவராக இருக்கின்றார்.

சூரா ஆலுஇம்ரான் 3 : 159

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்…..

⭕நபி (ஸல்)வின் மென்மையான உள்ளம்- மிக கடுமையான எதிரிகளையும் மன்னிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply