Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 9

 வசனம் 5

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا

அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ

மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ

நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ

மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ

மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ

  எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

வசனம் 6 – 9

வசனங்கள் லிஆன் என்ற சட்டம்

கணவன் தனது மனைவி மீது விபச்சாரம் குற்றம் சாட்டினால்.

ஒரு ஸஹாபி நபி (ஸல்) விடம் ஒருவர் தன் மனைவி விபச்சாரம் செய்வதைக் கண்டால் என்ன செய்வது என்று கேட்டபோது தான் இந்த வசனம் இறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஒரு கணவன் மனைவி விபச்சாரம் செய்வதைக்கண்டால் அவன் (ஜமாத்தினர் முன்) இப்படி நீ விபச்சாரம் செய்தாயா என்று கேட்க வேண்டும். அவள் ஆம் என்று கூறினால் அவளை கல்லெறிந்து கொல்லும் சட்டம் இஸ்லாத்தில் இருக்கிறது (இஸ்லாமிய ஆட்சியில்). அவள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இரண்டு பெரும் சத்தியம் செய்ய வேண்டும். முதலில் கணவன் சத்தியம் செய்ய வேண்டும். ( 4 முறை என்னுடைய மனைவியை ஒருவரோடு ஈடுபட்டார் என்ற என்னுடைய குற்றச்சாட்டு உண்மையானது என்று 4 முறை சத்தியம் செய்ய வேண்டும் 5 வது முறை நான் சொல்வதில் தவறு இருந்தால் அல்லாஹ் சாபம் என் மீது உண்டாகட்டும்; பிறகு இதே போல் மனைவியும் சத்தியம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு அவர்களது உறவு குறிக்கப்படும்.

வசனம் 10

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ‏

  இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply